Thangalaan review: தங்கலான் படம் எப்படி இருக்கு? தயாரிப்பாளரின் முதல் விமர்சனம்!

சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் 15ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும்.

தமிழ் சினிமாவைத்தாண்டி இந்திய சினிமா எதிர் பார்த்துக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தின் மீதான கூடுதல் ஹப்புக்கு காரணம் விக்ரமும் ரஞ்சித்தும் கூட்டணி அமைந்துள்ளது தான். ரஞ்சித் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரிசையில் தங்கலான் திரைப்படமும் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் டிரைலர், டீசர், மேக்கிங் வீடியோ வெளியாகி படத்தின் மீதான ஆவலை மேலும் தூண்டி உள்ளது. இந்த படத்திற்காக விக்ரம் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து, மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறார். இப்படம் விக்ரமின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்றும், அவர் நிச்சயம் ஆஸ்கர் விருதை பெறும் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Thangalaan Pa Ranjith Vikram

விக்ரமனின் தங்கலான்: கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 15ந் தேதி தியேட்டரில் வெளியாகும் இந்த படத்தினை தமிழ்நாடு, கேரளா, அந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் குறைந்தது 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நான்கு பாகமாக கூட எடுக்கலாம்: படம் வெளியான இன்னும் ஐந்து நாட்களே இருப்பதால், படத்திற்கான ப்ரேமோஷன் பணியினை படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இதில் பேசிய நடிகர் விக்ரம், தங்கலான் திரைப்படத்தை 4 பாகங்களாக எடுக்க கூட வாய்ப்புகள் இருக்கிறது. காரணம் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதைக்களம் உள்ளது. ஆகையால் ரஞ்சித் ஆசைப்பட்டல் இந்த தங்கலான் படத்தின் Prequel மற்றும் Sequel எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசினார்.

முதல் விமர்சனம்: இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். அதில், 'நான் மிகவும் மகழ்ச்சியாக இருக்கிறேன், படத்தை பார்த்துவிட்டு உடனே விக்ரம் அண்ணாவுக்கும் பா. ரஞ்சித் இருவரையும் போனில் அழைத்து பாராட்டினேன். படத்தின் முதல் பாதியை பார்த்து கொண்டிருக்கும் போதே எனக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. இந்த மாதிரி படத்தை நான் தயாரித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: இதுமட்டுமில்லாமல் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப தேசிய திரைப்பட கூட்டமைப்பிடம் விண்ணப்பித்து இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் தங்கலான் படம் இருக்கும் என நம்புவதாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X