Dhruv Vikram: வருஷ கணக்கா காத்திருந்த துருவ் விக்ரம் படத்தோட அப்டேட் வந்துடுச்சு.. பர்த்டே ட்ரீட்!
சென்னை: மாமன்னன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தை எப்போது ஆரம்பிப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தல் அப்டேட் வெளியானது.
நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹீரோவாக ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னதாக பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் படமாக வர்மா படத்தில் நடித்து வந்தார்.

துருவ் விக்ரம் பிறந்தநாள்: பாலா இயக்கிய வர்மா தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறிய துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் உதவி இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அந்த படமும் வெளியாகி சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது அப்பா சியான் விக்ரமுடன் நடித்த மகான் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடிதளத்தில் வெளியானது.
மாரி செல்வராஜ் படம்: சினிமாவுக்கு துருவிக் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் ஆரம்பிக்கும் என சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் அந்த படம் குறித்து வெளியாக இல்லையே.. ஒருவேளை டிராப் ஆகிவிட்டதோ என நினைத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சியான் விக்ரமின் தங்கலான் படத்தை இயக்கி வரும் பா. ரஞ்சித் தயாரிப்பில் செல்வராஜ் இயக்கத்தில் கபடியை பின்புலமாகக் கொண்டு துருவ் விக்ரம் நடித்து வரும் படம் உருவாகி வருகிறது.
மாரி செல்வராஜ் மற்றும் துரு விக்ரம் இருவரும் கபடி விளையாடும் மைதானத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு இருப்பது போன்ற போஸ்டர் ஒன்றை தற்போது பா ரஞ்சித் வெளியிட்டு துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தங்கலான் அப்டேட்: பரியேறும் பெருமாள், கர்ணன் இந்த ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் துரு விக்ரம் நடித்து வரும் கபடி திரைப்படம் கூடிய விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆனாலும் தொடர்ந்து தனது முயற்சிகளால் துருவ் விக்ரம் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. துருவ் விக்ரம் படத்தின் அப்டேட் வந்த நிலையில், ரசிகர்கள் பலரும் தங்கலாம் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்கிற கேள்வியை தான் முன்வைத்து வருகின்றனர்.
தங்கலான் படத்தின் சூட்டிங் சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிந்த நிலையில், இந்த ஆண்டுக்குள் அந்த திரைப்படம் வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அந்த அளவுக்கு தங்கலான் படத்தில் சிஜி வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











