”முன்னத்தி ஏர்” மறைந்து விட்டது.. இயக்குநர் பா. ரஞ்சித் உருக்கம்.. ஆர்யா, ஆரி, சமுத்திரகனி இரங்கல்

சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை, லாபம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

#BIG BREAKING இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்: தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி!

காலை முதலே ஏகப்பட்ட பிரபலங்கள் இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்தில் நடித்த ஆர்யா, சமுத்திகனி, பிக் பாஸ் ஆரி, இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளனர்.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

உண்மையிலேயே அவர் மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என் வாழ்க்கையில் சந்தித்த நபர்களில் மிகச்சிறந்த நபர்களில் இவரும் ஒருவர். அவரது பிரிவால் மிகவும் வேதனை அடைகிறேன். எப்போது அவர் நினைவுகள் நம்மோடு இருக்கும் என பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா, புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த அரிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சமுத்திரகனி இரங்கல்

சமுத்திரகனி இரங்கல்

இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்குநர் ஜனநாதனின் மறைவு செய்தி அறிந்து மிகவும் சோகத்தில் உள்ளார். அண்ணா என அழைத்து அவரது திருவுருவ புகைப்படத்தை ஷேர் செய்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர்

"எளிய மக்களின் வாழ்வை, அவர்கள் பின்னால் சுழலும் அதிகார சுரண்டலை, துணிச்சலுடன் காட்சிபடுத்தி தமிழ்த்திரையில் புது வெளிச்சம் பாய்ச்சிய "முன்னத்தி ஏர்"தோழர் திரு.SP ஜனநாதன் ஐயா அவர்களின் இறப்பு செய்தி பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!" என இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

கர்ணன் இயக்குநர் இரங்கல்

கர்ணன் இயக்குநர் இரங்கல்

"மக்களுக்கான சினிமாவை முன்னெடுத்து நகர்ந்த மிக சிறந்த தலைமையை இழந்துவிட்டோம் Miss You Thozhar" என பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆரி இரங்கல்

ஆரி இரங்கல்

"மறைந்த இயக்குனர் அண்ணன் S.P.ஜனநாதன் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, இந்திய திரை உலகத்திற்கே பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனன் இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், பல பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X