பா. ரஞ்சித்துக்கு மீண்டும் சிக்கல்.. சார்பட்டா பரம்பரை 2 படத்தில் இருந்து முக்கிய நபரே விலகல்?
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர். காரணம் இவரது படங்கள் பேசும் அரசியல் தான் முக்கியக் காரணம். இவரது படங்களுக்கு என பெரும்பாலான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் பேசும் அரசியலுக்கு நேர் எதிரான அரசியல் பேசுகிறேன் என எடுக்கப்படும் படங்கள் முதல் நாள் காட்சிகளுக்கே ஆட்கள் இல்லாமல் தியேட்டர்கள் காலியாக உள்ளது. தனது படங்களுக்கு வரவேற்பு இருந்தாலும், பா. ரஞ்சித் ஒவ்வொரு படத்திற்கும் பல சவால்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கும் ஒரு சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பின்னர் தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்கே மாறிவிட்டது. இதற்கு முன்னர் இருந்த பல இயக்குநர்கள் பெருமையாக பேசிய பல விஷயங்களை தனது திரைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார். மேலும் பா. ரஞ்சித்தின் கதைகள் மக்கள் மத்தியில் வியாபாரமாக மாறாது என பலரும் ரஞ்சித்தை எச்சரித்துள்ளார்கள். ஆனாலும் தனது திரை மொழியின் மீது கொண்ட நம்பிக்கையாலும், தான் ஏற்றுக் கொண்ட அரசியல் தத்துவத்தின் மீதான நம்பிக்கையாலும், தைரியமாக படங்கள் எடுத்தார். இவரது படங்களுக்கு நாளுக்கு நாள் மவுசு ஏறிக்கொண்டே உள்ளது.

இவரது இயக்கத்தில் தற்போது வேட்டுவம் எனும் படம் உருவாகி வருகிறது. இதில், கெத்து தினேஷ், ஆர்யா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக திட்டமிடப்பட்ட படம் என்றால் அது சர்பட்டா 2 படம் தான். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் கொரோனா காலகட்டத்தில் ரிலீஸ் ஆனது. ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தாலும், படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிப் படமாக மாறியது.

சார்பட்டா 2: ஆர்யா, கலையரசன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் குறித்து பா. ரஞ்சித் கூறும்போது, சார்பட்டா படத்தை என்னால் டிவியில் பார்க்க முடியவில்லை. காரணம் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய எடுத்தோம் எனக் கூறினார். மேலும் இந்த படம் உண்மையாக நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்: இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. அதேபோல் இந்த படத்தை ஆர்யா தயாரிப்பதாகவும் இருந்தது. மேலும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஆர்யா. படத்தின் முக்கிய தயாரிப்பாளராக இருந்தது, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தான். படத்தின் மொத்த பட்ஜெட் என ரூபாய் 80 கோடிகள் என நிர்ணயம் செய்யப்பட்டது. முதலில் தயாரிப்பாளராக இருந்த ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம், தற்போது அதில் இருந்து விலகி உள்ளது என கூறப்படுகிறது.
தங்கலான்: காரணம், தற்சமயம் அவர்களால் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. அதற்கு காரணம் தங்கலான் வணிக ரீதியாக பெருமளவிற்கு வெற்றியை பெறாதது, என கூறப்படுகிறது. ஆனாலும் வேட்டுவம் படத்தின் மூலம் வணிக ரீதியாகவும் பா. ரஞ்சித் கம்பேக் கொடுபார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.



Click it and Unblock the Notifications











