மகிழ்ச்சி.. பா. ரஞ்சித் வீட்டில் பாப்பா சத்தம்.. குழந்தைக்கு இப்படியொரு பெயரா?

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அவரது மனைவி அனிதா தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Recommended Video

Pa. Ranjith Blessed with Baby Boy | Salpetta | Thalapathy 65

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித்.

ரஜினிகாந்தின் கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கி, இந்தியளவில் மிகப்பெரிய இயக்குநராக அறியப்படுகிறார்.

மகள்

மகள்

அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு சிறப்பான இடத்தை பெற்றுத் தந்தது. இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அனிதா தம்பதியினருக்கு ஏற்கனவே மகிழினி எனும் மகள் இருக்கிறாள்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

37 வயதாகும் இயக்குநர் பா. ரஞ்சித், ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கி இந்தியளவில் அறியபட்டார். பாலிவுட்டில் பிர்சா முண்டா படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். முதல் குழந்தை மகளாக பிறந்த நிலையில், தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நீலம் புரொடக்‌ஷன்ஸ்

நீலம் புரொடக்‌ஷன்ஸ்

இயக்குநராக மட்டுமின்றி, தன்னைப் போல இயக்குநராகும் ஆசையில் துடிக்கும் திறமையான இளைஞர்களுக்கு படம் பண்ணும் வாய்ப்பை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நீலம் புரொடக்‌ஷனை உருவாக்கிய பா. ரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

என்ன பெயர்

என்ன பெயர்

மூத்த பெண் குழந்தைக்கு மகிழினி என்ற அழகிய தமிழ் பெயரை வைத்த பா. ரஞ்சித், தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு, மிளிரன் எனும் அட்டகாசமான தமிழ் பெயரை சூட்டியுள்ளார். ஒளிரும் தன்மையுடையவன் என்பதே அந்த பெயரின் பொருளாகும். வாழ்த்துக்கள் பா. ரஞ்சித் சார்!

சல்பேட்டா

சல்பேட்டா

பாலிவுட்டில் பிர்ஸா முண்டா படத்தை இயக்குவதற்கு முன்னதாக, ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் பாக்ஸிங் படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சல்பேட்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில், ஆர்யாவுடன் கலையரசன், துஷாரா மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X