நிலத்தகராறு.. பா. ரஞ்சித் சகோதரர் அடியாட்களுடன் சென்று தாக்குதல்.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு நிலத்தகராறு பஞ்சாயத்தில் ஈடுபட்டு அடியாட்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக விஷால் தனது ரத்னம் திரைப்படம் வெளியாகும் போது பேசியிருந்தார்.
ஆனால், சினிமா இயக்குநரான பா. ரஞ்சித்தின் தம்பியே இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறாரா என ரசிகர்கள் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள நிலத்தகராறு பிரச்சனையில் தலையிட்டுள்ள பா. ரஞ்சித்தின் அண்ணன் பிரபு சம்பந்தப்பட்ட நிலத்துக்கு அடியாட்களுடன் சென்று சிசிடிவி காட்சிகளை உடைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் பா. ரஞ்சித்: இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக இருந்த பா. ரஞ்சித் அட்டகத்தி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அவருடன் சந்தோஷ் நாராயணனும் பிரபலமான நிலையில், சுமார் 10 ஆண்டுகள் இருவரும் நல்ல கூட்டணி அமைத்து சூப்பரான பாடல்களை கொடுத்து வந்தனர். அட்டகத்தி படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படம் ரஜினிக்கே பிடித்துப்போக கபாலி படத்தில் நடித்தார். அதன் பின்னர் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தையும் ரஞ்சித் இயக்கினார். ஆனால், அந்த படம் தோல்வியை தழுவியது.

ரஜினிக்கு எதிராக விமர்சனம்: அயோத்தி கோயிலுக்கு ரஜினிகாந்த் சென்றது குறித்தும் அங்கே அவர் சொன்ன கருத்துக்கு எதிராக தனக்கு விமர்சனம் இருக்கு என ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பா. ரஞ்சித் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து தலித் சினிமா நிகழ்ச்சியில் ரஞ்சித் அருகே இருந்த நண்பர் ஒருவர் கபாலி, காலா படங்களில் நீங்கள் என்ன அரசியலை முன்னெடுத்து படத்தை இயக்கினீர்கள் என்கிற அறிவு ரஜினிகாந்துக்கு இருந்ததா? என்பது போன்ற கேள்வியை எழுப்ப ரஞ்சித் ஏளனமாக சிரித்தது ரஜினி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி நன்றி கெட்ட ரஞ்சித் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.
ரஞ்சித் சகோதரர் ரவுடித்தனம்: சென்னை, மணலி புதுநகரில் வசித்து வரும் ரிஷி கடந்த 2019ம் ஆண்டு வாங்கிய நிலத்துக்கு ஷகீலா என்பவரும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், ஷகீலாவுக்கு ஆதரவாக பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு வழக்கறிஞர்கள் எனக் கூறிக் கொண்டு அடியாட்களை அழைத்துச் சென்று சிசிடிவி கேமராக்களை கற்களை கொண்டு தாக்கி தகராறு செய்ததாக ரிஷி தற்போது மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











