Vijay: விஜய்க்கு சப்போர்ட் செய்த பா. ரஞ்சித்.. இதுக்கு பின்னாடி இப்படியொரு காரணம் இருக்கா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம், கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்பாத்தி எஸ். அர்ச்சனாவின் ஏ.ஜி.எஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தார். படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் செம கலெக்‌ஷன் செய்தது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் தியேட்டரில் வசூல் செய்த படம் என்றால் அது, விஜய்யின் கோட் படம்தான். இப்படியான நிலையில் விஜய்யின் கோட் படம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

Pa Ranjith Vijay The GOAT

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறபோவதாக பிப்ரவரி மாதம் அறிவித்தார். மேலும் தான் தற்போதுவரை ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுநேரமாக விலகப்போவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஒருபுறம் கொடுத்தாலும் மறுபுறம் விஜய் அரசியல் களத்தில் கால் வைத்துள்ளது, பெரும் வரவேற்பைப் பெற்றது.

Pa Ranjith Vijay The GOAT

விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்த பின்னர், வெளியான படம் கோட். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், விஜய், இசை வெளியீட்டு விழா மேடையில் அரசியல் பேசி, அது படத்தின் ரிலீஸில் எதாவது சிக்கலைக் கொண்டு வந்துவிட வாய்ப்பு உள்ளது எனவும், அதனால் தான் இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை எனவும் கூறினர்.

Pa Ranjith Vijay The GOAT

பாராட்டு: இப்படியான நிலையில் கோட் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சகர்கள் மத்தியில் படம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து பிரமாதப்படுத்தினார். மேலும், அவரது வயதுக்கு ஏற்றவகையில், ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.

Pa Ranjith Vijay The GOAT

பா.ரஞ்சித்: நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியிலும் படம் வசூல் குவித்தது. படம், உலகம் முழுவதும் ரூபாய் 455 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழுவே தெரிவித்தது. இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித்திடம் விமர்சனங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், " கோட் படத்திற்கு ஆதரவாக விமர்சகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. ஆனாலும் படம் தியேட்டரில் ஓடி வசூல் குவித்தது. இந்த வருடம் எந்தப் படத்துக்குமே விமர்சனங்கள் பெரிய அளவில் உதவவில்லை. கோட் படத்திற்கு அதிக நெகடிவ் விமர்சனங்கள்தான் வந்தது.

Pa Ranjith Vijay The GOAT

காரணம்: என்னென்னமோ செய்து படத்தை காலியாக்க முயற்சி செய்தார்கள். ஆனால் மக்கள் படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடினர். படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது" என்க் கூறினார். பா. ரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமாவில் இயக்குநராக மாறியவர். அதனால்தான் கோட் படத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X