twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்மால் மூச்சு விட முடிகிறது.. நாம் போராடுவோம்.. ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலைக்கு பா. ரஞ்சித் கண்டனம்!

    |

    சென்னை: கடந்த மே 25ம் தேதி இன வெறி பிடித்த வெள்ளை நிற போலீஸ் அதிகாரியால் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பா. ரஞ்சித் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    Recommended Video

    Madras படத்தில் நடித்த கார்த்தியின் அம்மா யார்? | Actress Rama Bio

    அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் கடந்த மே 25ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க கருப்பின மனிதரான ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவரை போலீஸ் அதிகாரி ஒருவர், தனது முட்டிக்காலால் நசுக்கி கொலை செய்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உலகையே உலுக்கியது.

    அந்த சம்பவத்தை மேலும், 3 போலீசார் வேடிக்கை பார்த்தது, கருப்பின மக்களிடையே கலவரத்தை தூண்டியது.

    இரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்!இரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்!

    நீதி வேண்டும்

    நீதி வேண்டும்

    கருப்பின மக்களுக்கு அமெரிக்காவில் பாதுகாப்பில்லை. ஜார்ஜ் ஃப்ளாய்டு போல பல மனிதர்கள், இன வெறி பிடித்த போலீஸ்காரர்களால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த முறை ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

    பிரபலங்கள் கண்டனம்

    பிரபலங்கள் கண்டனம்

    ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அப்படியே வெளியாகி வைரலானது. அந்த வீடியோவை பார்த்து பதபதைத்துப் போன பல பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இந்திய நடிகைகளான கரீனா கபூர் மற்றும் பிரியங்கா சோப்ராவும் இந்த இரக்கமற்ற கொலையையும் இனவெறியையும் கண்டித்து பதிவிட்டு இருந்தனர்.

    பா. ரஞ்சித் கண்டனம்

    பா. ரஞ்சித் கண்டனம்

    ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலைக்கு தென்னிந்திய சினிமாவில் தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு மூச்சு விட முடியாமல் இன வெறி பிடித்த அந்த அதிகாரி தனது முட்டிக்காலை வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றான்.

    நம்மால் மூச்சு விட முடிகிறது

    நம்மால் மூச்சு விட முடிகிறது

    ஆனால், நம்மால் மூச்சு விடுகிறது, இந்த அநீதி செயலுக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம் என பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் கருப்பினர்களுக்கும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராகவும் போராட்டங்களும், வன்முறையும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Pa Ranjith condemns the brutal murder of George Floyd which shakes the whole world recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X