கபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணைய தொடராக தயாரிக்க இருக்கிறார் பா.ரஞ்சித்.
சென்னை: கபாலி, காலா படங்களைத் தொடர்ந்து சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணைய தொடராக தயாரிக்க இருக்கிறார் பா.ரஞ்சித்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித். மூன்றாவது படத்திலேயே முன்னணி இயக்குநர்களுக்கும் கனவாக இருக்கும் ரஜினியை இயக்கும் வாய்ப்பைப் பெற்று, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி அடுத்தப் பட வாய்ப்பை அளித்ததால், மேலும் பிரபலமானார் ரஞ்சித். இதனால் அவரது அடுத்தப்பட அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் இணைய தொடர்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ரஞ்சித்தும் ஒரு இணைய தொடர் தயாரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக இருப்பதாகத் தெரிகிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை மற்றும் மரணம் பல மர்மங்களை உள்ளடக்கியது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே இது டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாகவும் ரிலீசானது.
எனவே, அவரது வாழ்க்கையில் நடந்த பரபரப்பான சம்பவங்களைத் தொகுத்து இந்த இணைய தொடரை ரஞ்சித் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீலப்பட நடிகையாக இருந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையும் இணைய தொடராக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











