பா.ரஞ்சித் இயக்கும் புதிய அந்தாலஜி திரைப்படம்.. முன்னணி இயக்குனர்கள் இணையும் ‘விக்டிம்’

சென்னை : இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்த சென்னை 28 திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் சமூகத்தில் பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் பா ரஞ்சித் இப்பொழுது சல்பேட்டா திரைப்படத்தை இயக்கியும் குதிரைவால் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார்.

பல முன்னணி இயக்குனர்களும் இப்போது அந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் தனது குருவான வெங்கட்பிரபு உடன் புதிய அந்தாலஜி திரைப்படத்தில் இணைந்து பா.ரஞ்சித் பணியாற்ற உள்ளார்.

கலவையான கதைகள்

கலவையான கதைகள்

புத்தம் புது காலை, சில்லுக்கருப்பட்டி என தமிழ் ரசிகர்களுக்கு சற்று புதுமையாக இருக்கும் அந்தாலஜி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வர இதுவரை இயக்குனர்கள் தனித்தனியாக படங்களை இயக்கி வந்த நிலையில் இப்பொழுது ஒன்றாக ஒரே திரைப்படத்தில் கலவையான கதைகள் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

9 இயக்குனர்கள்

9 இயக்குனர்கள்

தமிழில் இதுவரை வெளியான அந்தாலஜி திரைப்படங்கள் நான்கு அல்லது ஐந்து கதைகளை கொண்டு மட்டுமே உருவாகி வந்த நிலையில் இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய அந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா, சாய்பல்லவி உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்கள் நடிக்க இத்திரைப்படத்தில் கௌதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கேவி ஆனந்த், ஹலிதா ஷமீம், கார்த்திக் நரேன், பொன்ராம் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் முதன் முறையாக ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சல்பேட்டா

சல்பேட்டா

கபாலி, காலா, மெட்ராஸ் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் உற்று நோக்கப்படும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் இப்பொழுது ஒரு நேரடி ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வரும் அதே சமயம் தமிழில் ஆர்யா நடிப்பில் மாஸாக உருவாகிவரும் "சல்பேட்டா" திரைப்படத்தை இயக்கியும், "குதிரைவால்" திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார்.

முதன்முறையாக ஒரு அந்தாலஜி

முதன்முறையாக ஒரு அந்தாலஜி

தொடர்ந்து தரமான திரைப்படங்களை இயக்கி விருதுகளையும் வசூலையும் வென்றுவரும் பா ரஞ்சித் இப்பொழுது முதன்முறையாக ஒரு அந்தாலஜி திரைப்படத்தை இயக்கி வருகிறார். தனது குருவான வெங்கட் பிரபுவுடன் சென்னை 28 திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பா. ரஞ்சித் இப்பொழுது குருவுடன் இணைந்து "விக்டிம்" என்ற அந்தாலஜி திரைப்படத்தில் ஒரு பகுதியை இயக்க உள்ளார்.

முதல் முறையாக இயக்கும்

முதல் முறையாக இயக்கும்

வெங்கட் பிரபு, பா ரஞ்சித் மட்டுமல்லாமல் இதில் சிம்புதேவன் மற்றும் எம் ராஜேஷ் என பிரபலமான இயக்குனர்களும் இணைந்திருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு "விக்டிம்" என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு தயாரிக்க பா.ரஞ்சித் முதல் முறையாக இயக்கும் இந்த அந்தாலஜி திரைப்படத்தைக் காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X