Don't Miss!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- News
மாநில பொதுத்துறை நிறுவனங்களை இனி ஈஸியாக கண்காணிக்கலாம்! முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய வலைதளம்!
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சண்டைனு யார் சொன்னா?.சந்தோஷ் நாராயணனுடனான சலசலப்புக்கு பதிலளித்த இயக்குனர் பா ரஞ்சித்!
சென்னை : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் எந்தவிதமான சண்டையும் இல்லை என்று பா. ரஞ்சித் விளக்கம் அவளித்துள்ளார்.
அறிவு சுயாதீனமான பாடல்கள் மூலமும் பெரும் கவனத்தை ஈர்த்து வந்தார். இவர் பாடகி 'தீ யுடன் இணைந்து இவர் உருவாக்கிய "என்ஜாயி எஞ்சாமி" பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. யூட்யூபில் சாதனை படைத்தது.
அதேபோல, சந்தோஷ் நாராயணன் இசையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'நீயே ஒளி' என்ற பாடலை சான் வின்சென்ட் து பால் என்ற பாடகருடன் இணைந்து எழுதி, பாடியிருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
“தனுஷின் திருச்சிற்றம்பலம் புதிய மொந்தையில் பழைய கள்ளு”: ஒரே கதைய எத்தனமுறை ரீமேக் பண்ணுவீங்க?

அறிவு படம் இல்லை
என்ஜாயி எஞ்சாமி பாடலையும் நீயே ஒளி பாடலையும் அடிப்படையாக வைத்து ரோலிங் ஸ்டோன் கட்டுரை வெளிவந்தது. அந்த இதழின் அட்டைப் படத்தில், பாடகி தீ மற்றும் சான் வின்சென்ட் து பாலின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.

பா. ரஞ்சித் அதிருப்தி
இதனால் அதிருப்தி அடைந்த இயக்குநர் பா. ரஞ்சித், ரோலிங் ஸ்டோன் இதழ் அறிவின் போட்டோவை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்து புயலைக் கிளப்பினார். உடனே இதுகுறித்து ஷான் வின்செண்ட் மனம் திறந்தபோதும், சந்தோஷ் நாரயணனும் தீயும் எதுவும் பேசாமல் இருந்தனர். இதையடுத்து சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியிலும் அறிவு கலந்து கொள்ளாதது புயலை கிளப்பியது.

இருவருக்கும் சண்டை
சார்பட்டா பரம்பரை படத்துடன் பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். அதேபோல், விக்ரமுடன் இணையும் அடுத்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் கமிட் ஆகியுள்ளார்.

எந்த சண்டையும் இல்லை
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பா ரஞ்சித், இருவரும் இணைந்து 5 படங்களில் பணியாற்றியுள்ளோம். வேறு கலைஞர்களோடு பணியாற்றினால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். அதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றவே மாட்டோம் என்றில்லை. அந்த அளவுக்கு எங்களுக்குள் எந்தவிதமான சண்டையும் இல்லை. நான் அழைத்தால் சந்தோஷ் நாராயணன் நிச்சயம் பணியாற்றுவார் என்றுதான் நினைக்கிறேன் என பா ரஞ்சித் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.