ரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் போதும்…. பா. ரஞ்சித் உருக்கம்!

Recommended Video

Pa.Ranjith Speech | Gundu Success Meet | Athiyan Athirai

சென்னை : கபாலி படத்தில் ரஜினி அவர்கள் பேசிய ஒரு டைலாக்கே போதும் சினிமாவிற்கு நான் வந்ததற்கான பலனை அடைந்து விட்டேன் என்று பா. ரஞ்சித் உருக்கமாக தெரிவித்துள்ளார். ரஜினியை வைத்து நான் படம் எடுப்பேன் என்று நினைத்ததே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பா.ரஞ்சித் தாயாரித்த "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு " கடந்த 6-ஆம் தேதி திரைக்கு வந்தது. அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பா.ரஞ்சித் மிகவும் உருக்கமாக பேசினார்.

 Pa. ranjith fantastic speech for kabali dialogue

"படம் எடுக்கணும், படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை. காலேஜ் படிக்கும் போது, நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க தூண்டின. "சில்ட்ரென் ஆப் ஹெவன்'' போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன்.

என் வாழ்க்கையில் நான் அனுபவித்த வலிகளை படமாக பதிவு செய்ய நினைத்தேன். நான் பீப் பிரியாணி சாப்பிடுவது நிறைய பேருக்கு பிரச்சனையாக இருந்தது. இது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாவில் பேச வேண்டும் என்று ஆசை பட்டேன் அதை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், நான் ரஜினி சாரை வைத்து படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் "அம்பேத்கர் கோட் போட்டதுக்கும்'' காந்தி கோட் போட்டத்துக்கும்'' பின்னாடி அரசியல் இருக்கு என்று பேசியது ஒரு டையலாக் போது, சினிமாவிற்கு நான் வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்கிறேன்.

 Pa. ranjith fantastic speech for kabali dialogue

"பரியேறும் பெருமாள்'' படம் எடுக்கும் போது மக்கள் இப்படத்தை ஏத்துப்பாங்களா என்ற பயம் இருந்துச்சு, யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்து பாராட்டினார்கள். அந்தப்படம் தந்த உற்சாகம் தான் "குண்டு'' படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்யாமல் நல்ல விசயத்தை கொண்டு சேர்ப்பதில் பாத்திரிக்கையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இன்றைய கால கட்டத்தில் சினிமா ஒரு மிகப்பெரிய ஆயுதம், மக்களிடம் ஒரு விசயத்தை நேரடியாக சென்று சேர வேண்டும் என்றால் அது சினிமாவால் மட்டும் தான் முடியும். அப்படியான நல்ல கருத்துள்ள படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும் என்று பா.ரஞ்சித் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X