காதல் படத்தில் களமிறங்கும் பா ரஞ்சித்... 21ம் தேதி அடுத்த படத்தின் சூட்டிங் துவக்கம்

சென்னை : இயக்குநர் பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இதையடுத்து அடுத்த படத்தின் வேலைகளில் அவர் இறங்கியுள்ளார். இந்த முறை அவர் தேர்ந்தெடுத்துள்ளது காதல் களத்தை.

வரும் 21ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை படம்

சார்பட்டா பரம்பரை படம்

இயக்குநர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா வித்தியாசமான கெட்டப்பில் தோன்றியுள்ள சார்பட்டா பரம்பரை படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. வடசென்னையில் பிரசித்தி பெற்ற குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

வேலைகளை துவங்கிய ரஞ்சித்

வேலைகளை துவங்கிய ரஞ்சித்

இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பா ரஞ்சித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளார். இந்த முறை அவர் கையில் எடுத்துள்ளது காதல் களத்தை. படத்தின் பெயர் நட்சத்திரம் நகர்கிறது என்று வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமான கதைக்களங்களில் பணியாற்றி வந்த அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு காதலை கையில் எடுத்துள்ளார்.

விரைவில் நடிகர்கள் அறிவிப்பு

விரைவில் நடிகர்கள் அறிவிப்பு

இந்த படத்தின் சூட்டிங் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பை மேற்கொண்டு விரைவில் படத்தை முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதனிடையே சார்பட்டா பரம்பரை படத்தின் ரிலீசுக்கு பிறகு படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்களை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

கேரக்டர்களை செதுக்கும் கலை

கேரக்டர்களை செதுக்கும் கலை

தான் எடுத்துக்கொள்ளும் படத்திற்காக மிகவும் தீவிரமாக பணியாற்றி ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக செதுக்கி ரசிகர்களுக்கு தன்னுடைய படத்தின் மூலம் சிறப்பான அனுபவத்தை கொடுப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தன்னுடைய படங்கள் மூலம் இவர் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X