காலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்!

காலா படத்தில் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் தம்பி தீலீபனிற்கு பா.ரஞ்சித் வாய்ப்பளித்துள்ளார்.

By ShyamSundar

Recommended Video

காலாவால் மாறிய வாழ்க்கை.. திலீபனுக்கு உதவிய பா.ரஞ்சித்!

சென்னை: காலா படத்தில் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் தம்பி தீலீபனிற்கு பா.ரஞ்சித் வாய்ப்பளித்துள்ளார்.

காலா படம் தற்போது வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டுள்ளது. எல்லா ரஞ்சித் படங்களை போலவே இதிலும் சிலர் அறிமுகமாகி பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர்.

அட்டகத்தி படத்தில் இருந்தே ரஞ்சித் படங்களில், ஹீரோ, ஹீரோயின் இல்லாத சிலர் அதிக கவனத்திற்கு உள்ளவர்கள். அந்த வகையில் காலா படத்தில் ஏ.ஆர் முருகதாஸின் தம்பி தீலீபன் நன்றாக நடித்துள்ளார்.

யார் நடித்தது

யார் நடித்தது

ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டில், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, நானா படேகர், சம்பத், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் தற்போது அஞ்சலி பாட்டில் நடிப்பு எல்லோரையும் ஈர்த்துள்ளது. பலர் அஞ்சலி பாட்டில் குறித்து தேடியும், எழுதியும் வருகிறார்கள்.

ஏ.ஆர் முருகதாஸின் தம்பி நடித்துள்ளார்

ஏ.ஆர் முருகதாஸின் தம்பி நடித்துள்ளார்

இந்த படத்தில் ஏ.ஆர் முருகதாஸின் தம்பி திலீபன் நடித்துள்ளார். இவர் ரஜினிக்கு மகனாக படம் முழுக்க வந்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு அதிக பாராட்டை பெற்றுள்ளது. இவரது கதாப்பாத்திரமும் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் மோசம்

மிகவும் மோசம்

திலீபன் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், சினிமாவில் வந்ததில் இருந்தே வரிசையாக தோல்விதான். இவரது அண்ணன் ஏ.ஆர் முருகதாஸ் பெரிய இயக்குனராக இருந்தாலும் இவருக்கு படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. கிடைத்த வாய்ப்பும் சரியானதாக அமையவில்லை.

படம்

படம்

இவர் அழகிய தீயே, பொன்னியின் செல்வன், பட்டியல், சிந்தனை செய் ஆகிய படங்களில் சிறிய சிறிய ரோலில் நடித்துள்ளார். அதன்பின் செம்பட்டை என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பில் வத்தி குச்சி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் மட்டுமே கொஞ்சம் வெளியே தெரிந்தது. ஆனால் படம் மிக மோசமாக தோல்வி அடைந்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

அதன்பின் அவர் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். 2013க்கு பின் கடந்த ஐந்து வருடமாக எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில்தான் பா.ரஞ்சித் அவருக்கு 2017 காலா படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரே எதிர்பார்க்காத வகையில் ரஜினிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. கண்ணை மூடிக்கொண்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

திருப்பம்

திருப்பம்

இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் இவர் இப்போதுதான் சினிமாவில் கவனிக்கப்பட்டுள்ளார். படத்தில் முக்கியமான திருப்பத்திற்கு இவர் காரணமாக உள்ளார். இந்த படம் காரணமாக மீண்டும் சினிமா உலகில் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் திலீபன். பா.ரஞ்சித் கொடுத்த இந்த வாய்ப்பு காரணமாக இவருக்கு ஒரு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X