பா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் விஜய், அடுத்த பட ஹீரோ சூர்யா
Recommended Video

சென்னை:இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் யார், அவரின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்று தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா. ரஞ்சித். ஆன்மீக அரசியல் பேசி வரும் ரஜினியை காலா படத்தில் தன் கருத்துகளை பேச வைத்துவிட்டார்.
இந்நிலையில் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் ரஞ்சித். ஹீரோவை கூட தேர்வு செய்துவிட்டார்.

பாவம்
போராட்டம் வேண்டாம் என்று சொல்லி வரும் ரஜினியை படத்தில் மக்களை போராட வருமாறு அழைக்க வைத்து கைதட்டலை பெற்றார் ரஞ்சித். ரஜினியின் கொள்கைகளுக்கு எதிரான படமாக அமைந்துவிட்டது காலா.

நடிகர்
பா. ரஞ்சித்துக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தானாம். விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்று விரும்புகிறார் ரஞ்சித். ஆனால் அதற்கான சூழல் இன்னும் அமையவில்லையாம்.

சூர்யா
மெட்ராஸ் படத்தை இயக்கியபோது சூர்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ரஞ்சித்துக்கு. சூர்யாவிடம் ரஞ்சித் ஒரு கதை சொல்ல அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அதை உடனே படமாக்க முடியாத அளவுக்கு ரஞ்சித் பிசியாகிவிட்டார்.

கதை
மெட்ராஸ் பட நாட்களில் சூர்யாவிடம் சொன்ன கதையை அடுத்து படமாக்குகிறாராம் ரஞ்சித். சூர்யா, ரஞ்சித் கூட்டணி நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











