ஒரு வழியா ரஜினி அரசியலுக்கு வர 'இவர்' தான் காரணமாமே?

By Siva

Recommended Video

ரஜினி அரசியலில் வரத்திற்கு காரணம் யார்?- வீடியோ

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க இயக்குனர் பா. ரஞ்சித் தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவை வைத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திற்கு நோட்டா என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானவேல்ராஜா கூறியதாவது,

அரசியல்

அரசியல்

ரஜினி சார் 2 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வருவார் என்று நினைத்தேன். ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடித்த பிறகு அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன் நடக்கவில்லை.

ரஞ்சித்

ரஞ்சித்

மீண்டும் ரஞ்சித்துடன் சேர்ந்து காலா படத்தில் நடித்து முடித்த பிறகு ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளார். இதுவே ரஞ்சித்தின் பலம். தன்னுடன் பழகுபவர்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை எளிதில் உணர்த்துவார் ரஞ்சித்.

பங்களிப்பு

பங்களிப்பு

ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளதில் ரஞ்சித்துக்கு முக்கிய பங்கு உள்ளது. தான் வாழும் சமூகம் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார் ரஞ்சித். இருமுகன் டீஸரை பார்த்தபோதே ஆனந்த் ஷங்கருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

வசூல்

வசூல்

அர்ஜுன் ரெட்டி படம் ரிலீஸானவுடன் அதன் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார்கள். பாலா சார் இயக்கிக் கொண்டிருக்கிறார். படம் ரிலீஸான 4 வாரங்களுக்குள் நகரங்கள், மல்டிபிளக்ஸுகளில் மட்டும் ரூ. 2.75 கோடி வசூல் செய்தது.

ஹீரோ

ஹீரோ

தமிழகத்தில் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோவின் நடிப்பை மக்கள் அவ்வளவு ரசித்தார்கள். விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாவதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவரின் திறமைக்கு ஏற்ற தீனியாக இந்த நோட்டா படம் இருக்கும் என்றார் ஞானவேல்ராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X