ஆயாவுக்கு யாரு ‘பேபி‘ னு பேரு வெச்சா.. ஊர்வசி செய்த தரமான சம்பவம்.. ஜெ. பேபி‘ டிரைலர் ரிலீஸ் !
சென்னை : பா.ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெ. பேபி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித்தின் நீலம் பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெ. பேபி'
ஊர்வசி, மாறன், தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து நெடுமரம் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெ பேபி
சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் படம் ஜெ பேபி. இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
யாரு பேபினு பேரு வெச்சா
இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் இவ்வளவு பெரிய ஆயாவுக்கு யாரு பேபினு பேரு வெச்சாங்கனு தனது மழலை மாறாக்குரலில் கேட்கிறார். இதற்கு, ஊர்வசி தனக்கே உரித்தான பாணியில் நான் பொறந்தப்போ வெள்ளையா இருந்தனா... அப்போ வெள்ளைக்காரன் என்னை தூக்கி பேபி...பேபினு கொஞ்சி பேரு வெச்சான் என்று கூறுகிறார்.

வெகுளித்தனமான நடிப்பு
நடிகை ஊர்வசியின் வெகுளித்தனமாக நடிப்பு இந்த படத்திலும் ஒர்க்கவுட்டாகி இருக்கிறது. ஜீவா நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருப்பார். அதே போல மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் 5 குழந்தைகளுக்கு அம்மாவான நடித்து பாராட்டை பெற்றார். இந்த ஜெ பேபி திரைப்படத்திலும், மாறன்,தினேஷின் அம்மாவாக நடித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்
ஜெ பேபி திரைப்படம் சென்டிமென்ட் மற்றும் காமெடி கலாட்டாவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தாய் மற்றும் அவரது இரு மகன்களைச் சுற்றி நடக்கும் கதைக்களம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்னையின் அன்பை மையமாக கொண்டு சென்டிமென்ட் இப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்துள்ளதால், இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











