பா ரஞ்சித்துடன் இணையும் அனிருத்? மீண்டும் இயக்கத்தில் இறங்கும் நடிகர்.. டாப் 5 பீட்டிஸில்!

சென்னை: இயக்குநர் பா ரஞ்சித்தும் இசையமைப்பாளர் அனிருத்தும் முதல் முறையாக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான தகவல் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

பா ரஞ்சித்துடன் கூட்டணி அமைக்கும் அனிருத்? மீண்டும் இயக்கத்தில் இறங்கும் சசிகுமார்.. இன்றைய டாப் 5 பீட்டிஸில்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

குறையும் மவுசு

குறையும் மவுசு

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து கூறியுள்ளார் பிகே. இதேபோல் சென்னை எக்ஸ்பிரஸ் பட இயக்குநர் இயக்கியுள்ள சூர்யவன்ஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் தியேட்டர் ரிலீஸை தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

சூர்யாவின் அடுத்த படம்

சூர்யாவின் அடுத்த படம்

நடிகர் சூர்யா அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தை தொடர்ந்து பாலாவின் வாடிவாசல் படத்தில் நடிக்கும் சூர்யா, அதன்பிறகு அடங்கமறு படத்தின் இயக்குநர் கார்த்தி தங்கவேலு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனிருத்துடன் சேரும் பா ரஞ்சித்

அனிருத்துடன் சேரும் பா ரஞ்சித்

இதேபோல் பா ரஞ்சித் அடுத்து இயக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இயக்குநர் பா ரஞ்சித்து அடுத்து விக்ரமை வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைக்க இயக்குநர் பா ரஞ்சித் அனிருத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குற்ற பரம்பரை

குற்ற பரம்பரை

இதேபோல் இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் மீண்டும் படம் இயக்கப்போகும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதாவது வேல ராம மூர்த்தி எழுதியுள்ள குற்ற பரம்பரை நாவலை மைய்யப்படுத்தி சசிக்குமார் திரைப்படம் இயக்கவுள்ளதாக தனது வீடியோவில் தெரிவித்துள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X