அம்மா அழாத அம்மா.. தங்கலான் விழாவில் பெற்ற தாயை தேற்றிய பா.இரஞ்சித்.. எமோஷனல் மொமண்ட்

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அவர் இயக்கியதிலேயே மோசமான விமர்சனத்தை சந்தித்த படமாக அது அமைந்தது. மெட்ராஸ், அட்டகத்தி போன்ற அருமையான கதைகளை எழுதிய இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது மாதிரி ஒரு கதையை எழுதியிருக்கவே கூடாது. முகநூலில் நடக்கும் உரையாடல் போல் படம் நெடுக வாடை அடித்ததாக ஓபனாக பேசினர் ரசிகர்கள்.

Pa Ranjith Thangalaan

தங்கலான்: இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது அடுத்த படமாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். எப்போதும் வித்தியாசமாக கதை தேர்வை செய்யும் விக்ரம் பா.இரஞ்சித்துடன் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

அதிர்வு தரும் இரஞ்சித்: கோலார் தங்க வயலில் சுதந்திரத்துக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி தமிழ் மக்கள் எப்படியான வலிகளையும், வேதனைகளையும் சந்தித்தார்கள் என்பதை பா.இரஞ்சித் இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விஷயங்களை இரஞ்சித் தொட்டால் அது பெரும் அதிர்வுகளை உண்டு பண்ணும். இப்போது அவர் கேஜிஎஃப்பை தொட்டிருப்பதால் கண்டிப்பாக கன்னடத்தில் வந்த கேஜிஎஃப்பை விடவும் இரஞ்சித் காட்டப்போகும் கேஜிஎஃப் அதிர்வை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

ஆஸ்கருக்கு அனுப்ப திட்டம்: அதேபோல் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்தே ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஆஸ்கர் ரேஸுக்கு செல்கிறதோ இல்லையோ கண்டிப்பாக மக்கள் மனதுக்கு நெருக்கமாக சென்றுவிடும் என்று விக்ரம் மற்றும் இரஞ்சித்தின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். படமானது ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ஆடியோ வெளியீட்டு விழா: இந்நிலையில் நேற்று சென்னையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். பா.இரஞ்சித் பேசுகையில் அம்பேத்கர் குறித்தும்; தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்துகொண்ட விதம்; விக்ரமின் அசுரத்தனமான உழைப்பு என பல விஷயங்களை படபடவென பேசி முடித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் கவனம் பெற தொடங்கியிருக்கிறது.

அழுத அம்மா; தேற்றி இரஞ்சித்: நேற்றைய விழாவில் பலரை பற்றியும் பேசிக்கொண்டே வந்த பா.இரஞ்சித் கடைசியாக தனது தாய் குறித்து பேசுகையில், "இங்க எங்க அம்மா வந்திருக்காங்க. நான் சிறு வயதில் அவர்கள் என்னை கொஞ்சும் பிள்ளையாக இருந்தேன். ஆனால் இப்போது அவர் என்னை எப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை. ஏனெனில் நான் அவரை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டேன். ஏதோ ஒரு Zoneல் ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

இருந்தாலும் அம்மா என்றால் சூப்பர் எமோஷனல். அவரிடம் பேசும்போது மட்டும்தான் சின்ன பிள்ளையாக நான் உணர்கிறேன்" என்று கூறினார். அதனைக் கேட்ட இரஞ்சித்தின் தாய் உடனே எமோஷனலாக அழுதுவிட்டார். அதனை கவனித்த இரஞ்சித், 'எங்க அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க. அம்மா அழாத ம்மா' என்று சொல்லி தேற்றினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X