twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மோடி அண்டு ஏ பீர்.. யாருக்கு இந்த குறும்படம்!

    |

    சென்னை: பா.ரஞ்சித் வெளியீட்டில் வந்திருக்கும் இக்குறும்படம் அவர் தொடர்ச்சியாக பேசி வரும் அரசியல் எதிர்ப்பு அரசியலின் நீட்சிதான் இக்குறும்படம் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். பல விதமான ஜாதி கோட்பாடுகளை கோபத்துடன் கூடிய அவரது அணுகுமுறையை இக்குறும்படமும் கையாண்டு இருக்கிறது. மோடி அண்ட் ஏ பீர் என்ற இந்த படம் பலராலும் பகிர பட்டு வருகிறது.

    தந்தை பெரியாரின் பெண்ணியக் கோட்பாட்டை மேற்கோள் காட்டி துவங்கும் குறும்படம் பெண் விடுதலை பற்றி பேசப்போகிறது என்று ஒரு பக்கம் சிந்தித்தாலும் மறுபக்கம் அதற்கு நேர் எதிர் மாறாக பல வசனங்கள். மற்றொரு விஷயம் 'தந்தை பெரியாரை' 'பெரியார் ஈ.வி.ராமசாமி' என அடையாளப் படுத்தியதில் தெரிந்தது இந்த குழுவின் ஒட்டு மொத்த திட்டம்.

    இயக்குநர் பாலுமகேந்திராவை நினைவு கூர்ந்தது. இயக்குநர் படித்த பள்ளி காரணம் என உடனடியாக புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் அரசியல் ரீதியான சாட்டை அடி படங்களை பாலு மகேந்திரா அவர்கள் ஒரு போதும் பெரிதாக ஆதரித்ததாக தெரியவில்லை. மெல்லிய மனதுடன் மனித உணர்வுகளை மெல்லிய கோட்டுக்கு கீழ் அழகாக பதிவு செய்வது அவர் ஸ்டைல். சிஷியர் கொஞ்சம் மாறுபட்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை .

    அய்யய்யோ.. ஆடையில்லாமல் தமன்னா.. முகத்துல கரியோட யாரோ கைய வச்சிருக்காங்களே.. தீயாய் பரவும் போட்டோ!அய்யய்யோ.. ஆடையில்லாமல் தமன்னா.. முகத்துல கரியோட யாரோ கைய வச்சிருக்காங்களே.. தீயாய் பரவும் போட்டோ!

    நினைவு கூர்ந்தார்

    நினைவு கூர்ந்தார்

    இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியை நினைவு கூர்ந்தது எதற்காக? என்பதை குறும்படத்தின் கட்டுமானம் தெளிவு படுத்தியது. பொலான்ஸ்கியின் 'கார்னேஜ்' திரைப்படத்தின் கட்டுமானம்தான் இக்குறும்படத்தின் கட்டுமானம். இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கிக்கு நன்றி கூறுவதற்காக அவரது பெயரை நினைவு கூர்ந்தார் என கருத்துக்கள் எழுந்தாலும் வசனங்களால் அரசியல் பேசும் இக்குறும்படம், தமிழ் சினிமாவின் பல முன்னோடிகளை நினைவூட்டும்.குறும்படம் ரோமன் பொலான்ஸ்கியின் கட்டுமானத்தை பின்பற்றியது என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்க முனைந்து இருக்கிறார் இயக்குநர். அதற்கு இன்னொரு காரணம் தமிழ் நாட்டிலும் தமிழ் சார்ந்த குறிப்பிட்ட எந்த கட்சியையும் சொல்லாமல் மேலோட்டமாக பிரச்சனைகளை மட்டும் ஆணி தனமாக சொல்லி இருக்கிறார்கள்.

    ஒரே கூண்டிற்குள்

    ஒரே கூண்டிற்குள்

    குறும்படத்தின் துவக்க காட்சியே குறியீட்டில்தான் துவங்குகிறது. கருப்பு முயலும்,வெள்ளை முயலும் ஒரு கூண்டிற்குள் காதல் வயப்பட்டு ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு ஓடுகிறது. ஒரு கை வெள்ளை முயலை மட்டும் தூக்கிச்செல்கிறது. இதற்கான விளக்கத்தை படத்தின் இறுதியில் இடம் பெறும் பாடல் வரிகளோடு பொருத்தி பார்க்க வைக்கிறது

    குறி வைத்து தாக்கும் குறும்படம்

    குறி வைத்து தாக்கும் குறும்படம்

    குறி வைத்து தாக்குகிறது இந்த குறும்படம் என்று கூட சொல்லலாம் . இதை கதாநாயகன் அணிந்து இருக்கும் சட்டை, அவனுக்கு பின்னால் தெரியும் வர்ணம் பூசப்பட்ட சுவர், கதாநாயகனுக்கு 'அருண்' என்ற பெயர் மூன்றையும் பொருத்தி பார்த்தால் உள்நோக்கம் புரியும் . நாயகனும் நாயகியும் அமர்ந்து இருக்கும் வர்ணம் பூசப்பட்ட இருக்கைகளும் சான்றளிக்கும்.

    லொகேஷன்

    லொகேஷன்

    நாயகி ஒரு குறிப்பிட்ட தலைமுறையை சேர்ந்தவர் என்பதை அவரது குரல் மொழி, உச்சரிப்பு, ஸ்ருதி என்ற பெயர் ஆகியவையே எளிதாக அடையாளம் காட்டினாலும் அவரது தந்தையை எஸ்.வி.சேகரோடு ஒப்பிட்டு உரையாடலை கட்டமைத்து மிகத்தெளிவாக புரிய வைத்து இருக்கிறார் இயக்குநர். நாயகிக்கு காவி வர்ணத்தில் உடையை வடிவமைத்து அவர் சார்ந்திருக்கும் அரசியல் காட்சிப்படுத்தப்படுகிறது. அவரது உரையாடல்கள் மேலும் பட்டவர்த்தனமாக்குகின்றன. அவற்றை விளக்குவது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடும் வேலை என்பதை நன்கு புரிந்த இயக்குனர் விசுவலாக புரிய வைக்கிறார்.

    அழகான உரையாடல்கள்

    அழகான உரையாடல்கள்

    நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் உரையாடல்கள் பலரை பகடி செய்வது போல் கட்டமைத்து இருந்தாலும் படத்தின் இறுதிக்காட்சி சமுதாயத்தின் ஒட்டு மொத்த நிலையை பக்காவாக பக்க வாத்தியம் வாசிக்கிறது. அரசியல் காட்சிகள் பேசும் சமூக நீதி, பொருளாதாரம் அனைத்தும் வேஷம்... எல்லாமே பணத்திற்காகத்தான் என்ற விமர்சனத்தை குறியீட்டின் மூலம் வைத்திருக்கிறார்.

    காட்சிப்படுத்தல்

    காட்சிப்படுத்தல்

    முயல் போல எண்ணம் என்ற பாடல் காட்சி இறுதியில் வரும் போது, 'அதன் பின்னே நானும்' என்ற வரியில், பிளாக் லேபில் & ரெட் லேபில் ஜானி வாக்கர் மதுப்பாட்டில்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. 'வேறு முயலொன்று இடையில் துள்ளி விளையாட' என்ற வரியில் 'பணம்' காட்சிப்படுத்தப்படுகிறது. பிளாக் லேபில்& ரெட் லேபில் மது பாட்டில் பக்கத்தில் 'பச்சை' நிற பாட்டிலும் இடம் பெறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கோடு போட்டு விட்டேன், ரோடு போட்டுக்கொள்ளவும் என இயக்குனர் விட்டு விட்டார்.

    மதுக்கடையில் புத்தரின் உருவம்

    மதுக்கடையில் புத்தரின் உருவம்

    'மது நாட்டிற்கு,வீட்டிற்கு கேடு' மது பாட்டில்களிலும்,திரைப்படங்களிலும் தொடர்ந்து பரப்புரை நடக்கிறது. மதுக்கடையில் புத்தரின் உருவமும், 'ஓல்ட் மங்க்' என்ற மதுப்பாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் பாமரனுக்கு புரியாமல் போனாலும் பா.ரஞ்சித்திற்கும் இந்த படத்தின் இயக்குரருக்கும் நன்கு புரிந்து இருக்கிறது. படத்தின் இயக்குநர் தீன சந்திர மோகன் தலைமையில் அனைத்துதொழில் நுட்பக்கலைஞர்களும் மிகச்சிறப்பாக திரை மொழியை கையாண்டு உள்ளார்கள். அனைவரையும் வாழ்த்தி பல கருத்துக்கள் வந்தாலும் மறுபக்கம் சர்ச்சையான கருத்துக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

    English summary
    Pa Ranjith neelam production's short film modi and a beer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X