பாக்சிங் கதை.. மீண்டும் வடசென்னை.. பா. ரஞ்சித் இயக்க போகும் சல்பேட்டா.. யார் ஹீரோ தெரியுமா?

Recommended Video

Pa.Ranjith Movie Title | Salpetta | Arya | Sathyaraj | ஆர்யா நடிக்கும் சல்பேட்ட

சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் நடிகர் ஆர்யாவை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை எடுக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சினிமா கற்றுக்கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது தமிழகத்தின் முக்கிய இயக்குனராக வளர்ந்து உள்ளார். அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு இவர் அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலேயே வித்தியாசமான படம் மூலம் இவர் எல்லோரையும் கவர்ந்தார். அதன்பின் வரிசையாக தமிழக மக்களை தன்னுடைய படைப்புகளால் கவனம் பெற வைத்தார்.

என்ன படம்

என்ன படம்

இவருக்கு அடையாளம் தேடிக்கொடுத்த படம் என்றால் அது மெட்ராஸ்தான். ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியல் சதுரங்க பிரச்சனையும், அதற்கு பின் இருக்கும் ஜாதியும் இந்த படத்தில் கவனம் ஈர்த்தது. அட இப்படி கூட கதையை நகர்த்தி செல்ல முடியுமா என்று சொல்ல வைத்தது மெட்ராஸ் படம்.

அடுத்து என்ன

அடுத்து என்ன

மெட்ராஸ் படம் ஹிட் ஆனதை அடுத்து இவருக்கு அதிர்ஷ்டம் ரஜினி மூலம் கதவை தட்டியது. அதுவும் ஒருமுறை கிடையாது இரண்டு முறை. வரிசையாக கபாலி, காலா என்று இரண்டு படங்களை இவர் ரஜினிக்கு கொடுத்தார். இரண்டுமே ரஜினி நடித்த வித்தியாசமான படங்கள் ஆகும்.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில் பா.ரஞ்சித், போராளி பிர்சா முண்டாவின் கதையை படமாக எடுக்க போகிறார் என்று செய்திகள் வந்தது. பிர்சா முண்டாவின் சுதந்திர போராட்டத்தையும், அடிமை தனத்திற்கு எதிரான வீர தீரமான செயலையும் பா.ரஞ்சித் இயக்குகிறார் என்று செய்திகள் வந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் நடிகர் ஆர்யாவை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை எடுக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு சால்பேட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இந்த படத்தின் தயாரிப்பு குழு குறித்து இன்னும் விவரம் வெளியாகவில்லை. இதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதில் முக்கியமான வேடத்தில் சத்தியராஜ் நடிக்கிறார்.

என்ன கதை

என்ன கதை

இந்த படத்தின் கதை வடசென்னையில் நடக்கிறது. பாக்சிங் மற்றும் கானா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது திரில்லர் கதையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X