Pa. Ranjith: பா.ரஞ்சித்தின் அடுத்த படம் ஆர்யாவோடுதான்.. ஆனால் சார்பட்டா 2 இல்லை! அவரே கொடுத்த அப்டேட்
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் இயக்குநர். இவர் படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல், பண்பாட்டுத் தளத்தில் தனது அரசியலை குறிப்பாக சமூகத்தை முற்போக்கு சமூகமாக மாற்றும் செயலைச் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக முற்போக்கு படங்களை பல இயக்குநர்கள் இயக்கவும், முற்போக்கு கதைக்களம் கொண்ட படங்களை தயாரிப்பதால் மக்கள் ஆதரவு கிடைக்கும் எனவும் திரைத்துறையில் நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் பா. ரஞ்சித்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இவரது அடுத்த படம் குறித்து அவரே அப்டேட் கொடுத்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தங்கலான். விக்ரம். பார்வதி திருவேத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டினர். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக மாய - யதார்த்த திரைக்கதையில் படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல், பல்வேறு முற்போக்கு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்தனர்.

படத்தில் லைவ் சவுண்ட் முறை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பும் வசன உச்சரிப்பும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் அமைத்த ஜி.வி. பிரகாஷ் குமாரை பலரும் பாராட்டினர். இது மட்டும் இல்லாமல், படம் 1800களில் நடப்பதைப்போன்ற கதைக்களம். இந்தக் காலகட்டதில் கோலார் தங்கவயல் எப்படி இருந்தது எனவும், அங்கு தங்கத்தை யார் முதலில் வெட்டி எடுத்தனர் என்பது குறித்தும் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டியது, ரசிகரகளை வியக்க வைத்தது.

சார்பட்டா 2: இந்தப் படத்திற்காக, இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேசத திரைப்படத் திருவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. தங்கலான் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது. இதனால், இவரது அடுத்த படம் தங்கலான் பாகம் 2, அல்லது சார்பட்டா 2 என பேச்சுகள் அடிப்பட்டது.

அடுத்த படம்: அதேபோல் சூர்யாவை வைத்து ஒரு படம், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடப்பதைப்போன்று ஒரு படம் உருவாகவுள்ளது எனவும் தகவல்கள் உலா வந்தது. சார்பட்டா 2 படம் உருவானால், படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள். ஆனால் தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது கூறியுள்ளார். அதாவது தனது அடுத்த படத்தில் ஆர்யா, தினேஷ் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கும் வேட்டுவம் படம்தான் உருவாகவுள்ளது என, பா. ரஞ்சித்தே கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் பா. ரஞ்சித் படங்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications











