ஹேப்பி ராஜ் படம் பார்த்துட்டு G.V பிரகாஷ் குறித்து பா. ரஞ்சித்.. என்னங்க இப்படி சொல்லிட்டாரு
சென்னை: இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் செலிபிரிட்டி ஷோ சில தினங்களுக்கு முன்னரே திரையிடப்பட்டது. இதைப் பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் அப்பாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.
படத்தைப் பார்த்த பலரும் படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும், இரண்டாம் பாதி மிகவும் திருப்தியாக உள்ளது என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் குணச்சித்திர நடிகரும் காமெடி நடிகருமான ஜார்ஜ் மரியன் படத்தின் கதை நாயகனாக நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் தான் படத்தில் கதாநாயகனாக இருந்தாலும் படத்தின் மொத்த கதையும் ஜார்ஜ் மரியன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டே நகர்கிறது. அதேபோல் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்ற வெகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஜார்ஜ் மரியனுக்கு பாராட்டு: படத்தின் இரண்டாம் பாதியில் மிகவும் நெருக்கமாக நகரும் கதையைப் போலவே முதல் பாதியிலும் திரைக்கதை சிறப்பாக இருந்திருந்தால் படம் தற்போது இருக்கும் தரத்தைக் காட்டிலும் கூடுதலாக வந்திருக்கும் என்று விமர்சித்து வருகிறார்கள். உருவாக்கேலிக்கு எதிராகவும் இளைஞர்கள் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மைக்கு எதிராகவும் இயக்குநர் சொல்ல வந்த கருத்து பாராட்டத்தக்கது. நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்கனவே டிராகன் படத்தில் வெகு சில காட்சிகளே வந்தாலும் ரசிகர்களை மெல்ட் ஆக்கிடும் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் இந்த படம் முழுவதும் ஜார்ஜ் மரியன் மொத்த ரசிகர்களையும் தனது நடிப்பாலும் கூர்மையான வசனங்களாலும் கட்டிப் போட்டுள்ளார் என்று கூறலாம்.
பாராட்டு: செலிபிரிட்டி ஷோவில் படம் பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித் படம் பார்த்த பின்னர், நடிகர் ஜார்ஜ் மாரியன் கட்டிப்பிடித்து படம் நன்றாக உள்ளது. படத்தில் நீங்கள் தான் கதாநாயகன், ஜி.வி. பிரகாஷ் குமார் சப்போர்டிங் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் என்று பாராட்டி உள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலரும் இந்த படம் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இந்த படம் தரமான படமாக வெற்றிப் படமாக மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அமைந்துள்ளது என்றும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











