மற்ற இந்திய படங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம்! நூற்றாண்டின் தலை சிறந்த படமாக ரஜினியின் காலா தேர்வு

லண்டன்: உலகின் மிகப்பெரிய திரைப்பட காப்பகமாக விளங்குவது பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டியூட். லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஃபிலிம் இன்ஸ்டியூட் 1933 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மிகவும் பாரம்பரியமான இந்த ஃபிலிம் இன்ஸ்டியூட் உலகளாவிய அளவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்குவதிலும் அவற்றை கண்காணிப்பதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறை சார்பாக பல்வேறு பட்டப் படிப்புகளை கொடுத்து வருகிறது.

Pa Ranjith Rajinikanth Kaala

நூற்றாண்டின் 25 சிறந்த படங்கள்: இந்த பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இயங்கி வரும் இந்த ஃபிலிம் இன்ஸ்டியூட் சொந்தமான மாத இதழ் சைட் அண்ட் சவுண்ட் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த 25 படங்களை தேர்வு செய்து தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள ஒரே ஒரு திரைப்படம் ரஜினி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான காலா திரைப்படம் மட்டும்தான்.

Pa Ranjith Rajinikanth Kaala

காலா படம்: இயக்குநர் பா ரஞ்சித் ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கியதற்கு பின்னர், இந்தப் படத்தை இயக்கினார். இப்படம் வெளியான போது விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை அதாவது தூய்மை இந்தியா திட்டத்தை மறைமுகமாகவும் அதேநேரத்தில் கடுமையாகவும் விமர்சித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இப்படத்தை இயக்கியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இயக்குநர் பா ரஞ்சித்தை நேரடியாக அழைத்துப் பாராட்டி இருந்தார்.

Pa Ranjith Rajinikanth Kaala

படம் பேசிய அரசியல்: இதுமட்டும் இல்லாமல் படத்தில் மற்றொரு லேயராக குடிசை மாற்று வாரியத் திட்டத்தினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டு இருக்கும். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை தாராவியில் நடைபெறுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த படத்தின் இறுதியில் ரஜினி இறந்து விடுவார் என்பதைப் போலும் தாராவியில் உள்ள அனைவரும் காலாவாக அதாவது ரஜினியாக மாறுவார்கள் என்பதைப் போலவும் அமைகப்பட்டு இருக்கும். இது மட்டும் இல்லாமல், சமத்துவ சமுதாயத்திற்குத் தேவையான கருத்தியல்களான அம்பேத்கரியம், பெரியாரியம் மற்றும் மார்க்ஸியக் கருத்துகளை படத்தின் இறுதிக் காட்சியில் திரைமொழி வாயிலாக காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குநர். இதற்காகவே முற்போக்கு இயக்கங்கள் அவரைப் பாராட்டியது.

Pa Ranjith Rajinikanth Kaala

படக்குழுவினர் மகிழ்ச்சி: இந்த நூற்றாண்டில் தலை சிறந்த 25 படங்களில் காலா திரைப்படம் இடம்பெற்றுள்ளதால் காலா திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பாளர் தனுஷ் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலருக்கும் இந்த தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

Pa Ranjith Rajinikanth Kaala

இந்த நூற்றாண்டில் 25 படங்களாக சைட் அண்ட் சவுண்ட் மாத இதழ் வரிசைப்படுத்தி உள்ளது. அதில் ஓல்ட் பாய், ஹிஸ்டரி ஆஃப் பைனான்ஸ், இன்லேண்ட் எம்பயர், பார்ப்பாரா, பிரைட்ஸ் மேட்ஸ், அன்ரிலேடட், விண்டோ உள்ளிட்ட 25 படங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் காலாவும் இடம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X