தொகுப்பாளினி அர்ச்சனாவை பல ஆண்டுகளுக்கு முன்னர் டீவியில் பங்கமாக பிராங்க் செய்தது பற்றி பா.ரஞ்சித்

சென்னை: நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களும் படக்குழுவினரும் சார்ப்பாட்ட பரம்பரையில் நடித்த நடிகர்களும் அந்தப் புரமோஷனில் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளர் அர்ச்சனாவை பா.ரஞ்சித் பிராங்க் செய்த வீடியோ ஒன்றை பற்றி கேள்வியும் கேட்டுள்ளனர்.

டான்ஸிங் ரோஸ்

டான்ஸிங் ரோஸ்

டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்திற்காக கேரளாவில் இருந்து ஒரு நபர் ஆடிஷனுக்கு வந்து ஒரு வாரம் குத்க்ச் சண்டை பயிற்சி செய்துவிட்டு பிறகு அந்தக் கதாபாத்திரத்திற்கு செட் ஆக மாட்டார் என்று ரஞ்சித் அவரை அனுப்பி விட்டாராம். அதன் பின்னர் பல நடிகர்களை ஆடிஷன் செய்துள்ளார். அப்போது ரஞ்சித்துடன் இருந்த ஒரு நபர் சபீரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரும் வந்து ஆடிஷனில் கலந்து கொண்டாராம். ஆனால் இவர் கேட்ட கால்ஷீட் தேதிகளில் வேறொரு படத்தில் ஒப்பந்தமானதால் நடிக்க முடியவில்லை என்று சபீரும் சென்றுவிட்டாராம். மீண்டும் பல நடிகர்களை ஆடிஷன் செய்து அதில் ஒரு நபர் முடிவாகி டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தின் உடைகள் எல்லாம் கொடுத்து போட்டோ ஷூட்டிங் நடத்தினார்கள்.

திருப்தி அடியாத ரஞ்சித்

திருப்தி அடியாத ரஞ்சித்

ஆனால் ரஞ்சித்திற்கு திருப்திபடாமல் இருந்துள்ளது. அப்போது மீண்டும் சபீர் தானாகவே வந்து நானே நடிக்கிறேன் என்று கூற, ஏற்கனவே தேர்வாகி இருந்த நபரிடம் ரெக்வஸ்ட் செய்து அனுப்பிவிட்டு அதன் பின்னர்தான் சபீரை நடிக்க வைத்ததாகவும் அந்த சமயத்தில் சபீர் தனக்கு ஒல்லியாக தோன்றியதால் சற்று எடை போடச் சொன்னதாகவும் உடனே தான் சிக்ஸ் பேக் வைத்திருந்ததை காட்டியதால் இப்போது இருக்கும் உடல்வாகு டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று கூறி அப்படித்தான் ஒப்பந்தம் செய்தாராம் ரஞ்சித்.

அர்ச்சனா பிராங்க்

அர்ச்சனா பிராங்க்

பல ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவை இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் பிராங்க் செய்த வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் இணையதளத்தில் வைரலானது. அதில் தான் ஒரு கதையை வைத்துள்ளதாகவும் அதில் நீங்கள் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் எனவும் ரஞ்சித் கேபிள் மீதெல்லாம் ஏறி அட்டகாசம் செய்வது போல் அந்த பிராங்க் நிகழ்ச்சி இருக்கும். அதுவரை ரஞ்சித் அவர்களை சீரியஸாக மட்டுமே பார்த்துள்ள மக்களுக்கு அந்தப் பிராங்க் நிகழ்ச்சி ஆச்சரியத்தை கொடுத்தது.

ரஞ்சித் கருத்து

ரஞ்சித் கருத்து

ரஞ்சித்தின் அனுபவத்தை பற்றி கேட்டபோது சென்னை 28 தயாரிப்பாளர் தான் அந்த நிகழ்ச்சிக்கும் தயாரிப்பாளர். நீ நடிக்கிறியா என்று கேட்டவுடன் தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுபவம் இருந்ததால் உடனே நடிக்க சம்மதித்ததாகவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது வைரலாகும் என்று நினைக்கவில்லை எனவும் இந்தச் சமயத்தில் ஏனடா அதை வெளியிட்டீர்கள் எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார் பா.ரஞ்சித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X