விஜய்க்கு பா.இரஞ்சித் சொன்ன கதை.. ஆஹா நடந்திருந்தா சூப்பரா இருந்திருக்குமே.. மிஸ் ஆகிடுச்சு
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா. இரஞ்சித். கடைசியாக அவர் தங்கலான் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோரை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் படம் ரிலீஸாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பா.இரஞ்சித் அட்டகத்தி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அதனையடுத்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கபாலி, காலா என தொடர்ச்சியாக இயக்கினார். அந்தப் படங்கள் டீசன்ட்டான வெற்றியை பெற்றன. அப்படங்களுக்கு பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
இப்போதைய படங்கள்: கடைசியாக அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கினார். அதன் கதைக்களம் அட்டகாசமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களிடம் முழுவதும் கனெக்ட் ஆகாததால் தோல்வியை சந்தித்தது. அடுத்தததாக அட்டகத்தி தினேஷை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் சார்பர்ட்டா பரம்பரை 2 படத்தையும் இயக்குகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

பா.இரஞ்சித் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "சார்பட்டா 2 படத்துக்கான கதையை தமிழ்ப் பிரபாவுடன் சேர்ந்து எழுதிவருகிறேன். படத்துக்கான அடிப்படை கட்டமைப்பை நாங்கள் ஏற்கனவே உருவாக்கிவிட்டோம். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல் விஜய்க்கு நான் ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இருந்தாலும் சில காரணங்களால் அந்தப் படத்தை தொடங்க முடியாமல் போய்விட்டது.
ரஜினியுடன் பணியாற்ற விருப்பம்: மீண்டும் நான் ரஜினிகாந்த்துடன் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் எனது கதையும், அவர் விரும்பும்படி ஒரு கதை உலகத்தையும் இணைத்து ஒரு படம் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியுமா என்பதை பார்க்க வேண்டும். பிர்சா முண்டாவுக்காக பாலிவுட் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அவர்களது கால்ஷீட் பெறுவது ரொம்பவே கஷ்டம். இறுதியாக ஒரு நடிகர் அந்த்ப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.
மாரி செல்வராஜ் பற்றி: மாரி செல்வராஜ் மற்றும் என்னுடைய படங்கள் சாதிய படங்கள் என்று விமர்சனங்கள் வருகின்றன. அதற்கு நான் பதிலளிக்கவில்லை. அதை அவர்களுடைய கருத்துக்கே விட்டுவிடுகிறேன். ஆரம்பத்தில் விமர்சித்த சிலர்கூட இப்போது த்ங்கள் கருத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்க்ள். மாரி செல்வராஜ் இவ்வளவு வளர்ச்சியடைந்ததை பார்த்து மகிழ்ச்சி. பைசன் படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள், சேட்டிலைட், ஓடிடியிடையே பெரும் போட்டி நிலவியது. அவரது படங்கள் ஆடியன்ஸிடம் நல்ல ரெஸ்பான்ஸை பெறுகின்றன. அவரது இயக்கத்தில் வாழை படத்தின் இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் வளர்ந்து என்ன செய்யும் என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications