பாலிவுட்டுக்கு போகும் பா ரஞ்சித்.. பிர்சா முண்டா ஷூட்டிங் எப்போ ஆரம்பமாகிறது தெரியுமா?

மும்பை: விஷ்ணு வர்தன், ராகவா லாரன்ஸ், அட்லி என ஏகப்பட்ட கோலிவுட் இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், அந்த பட்டியலில் இயக்குநர் பா. ரஞ்சித் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறார்.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பாகவே பாலிவுட்டில் இயக்குநர் பா. ரஞ்சித் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் எப்போ ஆரம்பம் ஆகப் போகிறது என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சியான் விக்ரமின் புதிய படத்தையும் பா ரஞ்சித் இயக்க உள்ள நிலையில், எந்த படத்தை முதலில் முடிப்பார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பட்டையை கிளப்பும் பா ரஞ்சித்

பட்டையை கிளப்பும் பா ரஞ்சித்

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா ரஞ்சித் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அந்த படம் வெற்றியானதும் பாராட்டிய ரஜினிகாந்த் ரஞ்சித் நடிப்பில் உருவான கபாலி படத்தில் நடித்தார். பா ரஞ்சித்தின் இயக்கம் பிடித்துப் போக காலா படத்திலும் இந்த கூட்டணி தொடர்ந்தது.

பாலிவுட்டில் பிரபலம்

பாலிவுட்டில் பிரபலம்

காலா படத்தை மும்பை பேக்ரவுண்டாக கொண்டு இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய நிலையில், இந்தி படங்களை இயக்கும் சூழல் உருவாகின. அப்போது தான் பா. ரஞ்சித்தை அணுகிய நமா பிக்சர்ஸ் அவர் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அந்த படத்தை அப்போதைக்கு பா ரஞ்சித் ஆரம்பிக்கவில்லை.

சக்சஸ் தந்த சார்பட்டா

சக்சஸ் தந்த சார்பட்டா

பிர்ஸா முண்டா படத்தை பா ரஞ்சித் இயக்கப் போவதாக அப்போதே தகவல்கள் வெளியான நிலையில், தமிழில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தின் மீது முழு கவனத்தை செலுத்தினார் பா. ரஞ்சித். சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், மீண்டும் பிர்ஸா முண்டா படத்தை இயக்கும் பாதைக்கு திரும்பி உள்ளார்.

தாமதம் ஏன்

தாமதம் ஏன்

சமீபத்தில், இது தொடர்பாக பேசிய பா ரஞ்சித் பிர்ஸா முண்டா கதையை இயக்குவது அவ்வளவு சாதாரண விஷயமில்லை, ஏகப்பட்ட ரிசர்ச் வேலைகள் செய்ய வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் இந்த தாமதம் இதனை புரிந்து கொண்டு அதற்காக நேரம் கொடுத்த நமா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் ஷரீன் மந்த்ரி மற்றும் கிஷோர் அரோராவிற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

எப்போ ஆரம்பம்

எப்போ ஆரம்பம்

சியான் விக்ரமின் 60வது படத்தையும் பா ரஞ்சித் இயக்கவுள்ள நிலையில், பிர்ஸா முண்டா படம் எப்போது துவங்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த படம் துவங்கும் என அதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இதுபோன்ற சமூகத்திற்கு தேவையான கருத்துள்ள படங்களை தயாரிப்பது தான் தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X