ஒரு வேளை இவரே நடிக்கப் போறாரோ.. பாக்ஸர் லுக்கில் மாஸ் காட்டும் பா. ரஞ்சித்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: பாக்ஸர் லுக்கில் பக்காவாக போஸ் கொடுத்திருக்கும் பா. ரஞ்சித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

பாக்ஸர் லுக்கில் மாஸ் காட்டும் பா. ரஞ்சித்.. வைரலாகும் போட்டோ

ஆர்யா நடிப்பில், வடசென்னை இளைஞர்களின் பாக்ஸிங்கை மையப்படுத்தி படமெடுத்து வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.

அந்த படத்திற்கு சல்பேட்டா என்றும் சல்பேட்டா பரம்பரை என்றும் பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இதுவரை அதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயா

வெங்கட் பிரபு சிஷ்யன்

வெங்கட் பிரபு சிஷ்யன்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோவா உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிவர் பா. ரஞ்சித். பின்னர் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது நீலம் புரொடக்‌ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி அதன் மூலம் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பும் கொடுத்து வருகிறார்.

முரட்டுத் தனமாக மாறிய ஆர்யா

முரட்டுத் தனமாக மாறிய ஆர்யா

மெட்ராஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய பா. ரஞ்சித், சர்வதேச அளவில் பிரபலமானார். தற்போது ஆர்யா நடிப்பில் வடசென்னை இளைஞர்களின் பாக்ஸிங் கதையை படமாக்கி வருகிறார். இந்த படத்திற்காக முரட்டுத் தனமாக வொர்க்கவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்த ஆர்யாவின் புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸர் லுக்

பாக்ஸர் லுக்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ள பாக்ஸர் லுக் புகைப்படம் எக்கச்சக்க லைக்குகளை அள்ளியது மட்டுமின்றி, பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. பாக்ஸிங் கிளவுஸை அணிந்து கொண்டு பஞ்ச் பண்ணி பக்காவாக மாஸ் காட்டுகிறார் பா. ரஞ்சித்.

நீங்களே நடிக்கலாம்

நீங்களே நடிக்கலாம்

அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும், அண்ணா செம மாஸா இருக்கீங்க, நீங்களே ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும், சல்பேட்டா படத்தில் வில்லனாக நீங்களே நடிக்கிறீங்களா என்றும் பல்வேறு கமெண்ட்டுகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இந்த படத்தைத் தொடர்ந்து பிர்ஸா முண்டா பயோபிக் படத்தை பாலிவுட்டில் இயக்கவும் ரெடியாகி வருகிறார் ரஞ்சித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X