twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பா.இரஞ்சித் படங்கள் ஜாதிய படங்களாக பார்க்கப்படுகிறதா? - நடிகரின் பேச்சால் பரபரப்பு

    |

    Recommended Video

    பா. ரஞ்சித் படத்தில் சாதி வெறியர்களை விளாசிய ரித்விகா- வீடியோ

    சென்னை : 'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இப்படத்தில் 'அட்ட கத்தி' தினேஷ், 'கயல்' ஆனந்தி, ரித்விகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இசையமைப்பாளர் தென்மா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன், ஏராளமான சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.

    Pa.Ranjiths films viewed as caste films?

    'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் தென்மா, 'கேஸ்ட்லெஸ் கலக்டிவ்' இசைக்குழுவை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்ததோடு, கானா பாடகர்களுக்கு, முறையாக பாட்டு பாடும் பயிற்சியும் வழங்கி வந்தார். நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். இப்படத்தின் சில பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அனைத்துப் பாடல்களும் வெளியாகியுள்ளன.

    Pa.Ranjiths films viewed as caste films?

    இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், "எங்கள் நீலம் தயாரிப்பின் 'பரியேறும் பெருமாளை' வெற்றியடைய செய்தது போல், எங்கள் இரண்டாவது படமான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றியடைய செய்வீர்கள் என்று நம்புகிறேன்." என்று எளிமையாக பேசினார்.

    Pa.Ranjiths films viewed as caste films?

    பின்னர் பேசிய பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ், "நீலம் புரொடக்‌ஷனின் மூன்றாவது படத்தையும் நான்தான் இயக்க போகிறேன். எனக்கு இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் பா.இரஞ்சித் அண்ணன் மீதும் உரிமை இருக்கிறது. பா.இரஞ்சித் என்னை ஏதோ ஒரு இடத்தில் இருந்து எடுத்து வந்து இந்த இடத்தில் அமர வைத்து இருக்கிறார். அதே போல் ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்த அதியன் ஆதிரையையும் தற்போது இயக்குநர் ஆக்கியுள்ளார் பா.இரஞ்சித்." என்றார்.

    Pa.Ranjiths films viewed as caste films?

    குண்டு படத்தின் கதாநாயகன் தினேஷ் பேசிய போது, "நான் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளேன். இரும்பு கடையில் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்தேன், அதன் மூலம் மூக்கில் இருந்து பல முறை இரத்தம் வந்துள்ளது. அப்போது தான் இரும்பு கடையில் வேலை செய்பவர்களை எண்ணி மிகவும் வருந்தினேன். அன்பு காட்டுங்கள் வேறு எதுவும் வேண்டாம், வெறுப்பை வளர்க்காதீர்கள்." என்றார்.

    ஐய்யயோ....அக்‌ஷரா ஹாசன்...! - கதறும் 'அக்னி சிறகுகள்' படக்குழு

    கயல் ஆனந்தி பேசுகையில், "நீலம் தயாரிப்பு என்றால் கதை கேக்காமல் கூட நடிப்பேன், அந்த அளவுக்கு திறமையான கலைஞர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்." என்றார்.

    Pa.Ranjiths films viewed as caste films?

    நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், "வேறு ஒருவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களை இயக்கி இருந்தால் புகழ்ந்து இருப்பீர்கள், பா.இரஞ்சித் படம் என்பதால் ஜாதி படமாக ஏன் பார்க்கப் படுகிறது, அவ்வாறு பார்க்காதீர்கள், என்று பேசியவர், "தான் யாரையும் கிண்டல் செய்து மேலே வரவேண்டும் என்ற நிலை எனக்கில்லை" என்று அழுத்தம் திருத்தமாக, யாரை பற்றியோ குறிப்பிட்டு கூறிவிட்டு நகர்ந்தார்.

    ரமேஷ் திலக்கின் இத்தகைய பேச்சு பா.இரஞ்சித்தின் படங்கள் ஜாதிய படங்களாக பார்க்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியதோடு, தற்போது கோடம்பாக்கத்தில் விவாத பொருளாகவும் மாறியிருக்கிறது. ஏற்கனவே ஜாதி பற்றி பேசி பேசியே, இயக்குநர் பா.இரஞ்சித் அதை வளர்த்து விடுகிறார், என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், ரமேஷ் திலக்கின் பேச்சு கோலிவுட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Director Pa.Ranjith continues his film Neelam Productions, The film produced on behalf of the 'Irandam Ulagaporin Kadaisi Gundu'. The film is directed by Introducing Director Adiyan Aathirai. Dinesh, Gayal Aanandhi, Rithvika, Ramesh Tilak and many others Acted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X