ஆர்யாவை விட வேகமாக ரெடியாகும் பா. ரஞ்சித்.. சார்பட்டா 2 வில் வேம்புலியோடு ஒரு மேட்ச் இருக்கா
சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். சினிமாவை பொழுது போக்காக மட்டும் கையாளாமல், அதை ஒரு அரசியல் ஆயுதமாக கையாளும் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் வேட்டுவம். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. அதேபோல் பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் சார்பட்டா 2.
இந்த படத்திற்கான திரைக்கதை வடிவமைப்பதில் பா. ரஞ்சித் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கையில், பா. ரஞ்சித் ஜிம்மில் மிகத் தீவிரமாக ஒர்க் -அவுட் செய்வது, நாள்தோறும் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் என தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

வேம்புலியுடன் மேட்ச்சா?: இதைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலருக்கும் சார்பட்டா 2வில் இயக்குநர் பா. ரஞ்சித் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு எடுத்துவிட்டாரா? இந்த அளவுக்கு மிகவும் சீரியஸாக ஒர்க்-அவுட் செய்து வருகிறாரே என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ஒரு சில ரசிகர்களோ, என்ன ரஞ்சித் சார் சார்பட்டா 2வில் வேம்புலி உடன் மேட்ச்க்கு ரெடி ஆகிட்டு இருக்கீங்களா என்றும், அதான், சார்பட்டா படம் உருவாக்கப்பட்ட போதே நீங்கள் பாக்ஸிங் கற்றுக் கொண்டவர் தானே என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

சார்பட்டா: பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் சார்பட்டா. இந்த படத்தை தற்போதும் திரையரங்கில் ரிலீஸ் செய்யச் சொல்லி ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். காரணம் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி இருந்தால் பா. ரஞ்சித்தின் திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூலை ஈட்டிய படமாக இருந்திருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் சார்பட்டா 2 படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாகவாவது சார்பட்டா படத்தின் தியேட்டரிக்கல் ரிலிஸ் நடக்குமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள வேட்டுவம் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. இப்படம் பா. ரஞ்சித்தின் வழக்கமான திரைப்படமாக்கல் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications