பா.ரஞ்சித் படத்திற்கு ‘A’ சான்றிதழ்..அப்படி என்ன படத்தைய்யா எடுத்து வெச்சியிருக்காரு?

சென்னை : பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சென்சார்போடு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது.

Recommended Video

Pa.Ranjith | அட்டகத்தி இல்லைனா என் Journey இப்படி சிறப்பா இருந்திருக்காது | *Launch

தமிழ் சினிமா மீடியாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

இயக்குநர் பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் கதாநாயகியாக செல்வன், கலையரசன், அரிகிருஷ்ணன் எனப் பலர் நடித்திருக்கின்றனர்.

31ந் தேதி ரிலீஸ்

31ந் தேதி ரிலீஸ்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றனர். இந்த படத்தை நீலம் புரொடக்சன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பா ரஞ்சித்தின் மனைவி அனிதா அவர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.

பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா?

பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா?

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் டிரைலரில், தாலி கட்டுனா மட்டும் தான் நம்ம லவ் கண்டினியூ ஆகும்னா?அப்போ லவ்வோட வேல்வியூ என்ன? அது மட்டுமின்றி பையனும் பையனும், பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா? என்ற கேள்வியும் டிரைலரில் இடம் பெற்றிருந்தது. ஒரு வித்தியாசமான பார்வையில் பா ரஞ்சித் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஏ சான்றிதழ்

ஏ சான்றிதழ்

இந்த படத்தில் லவ், ரொமான்ஸ், கசமுசா என விவகாரமான பல காட்சிகள் உள்ளதால், இந்த படத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால், இந்த படத்தை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும், குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்கமுடியாது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பா ரஞ்சித்தா இப்படி என்றும், அப்படி என்ன படத்தைய்யா எடுத்து வெச்சியிருக்காரு? என்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பா.இரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களில் இந்த படம் மட்டும் தான் ஏ சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X