பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரிலீஸ் அப்டேட்: இந்தப் படத்தோட ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை முடித்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அட்டகத்தி முதல் காலா வரை
வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்து 'அட்டகத்தி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். ரஞ்சித்தின் படங்களில் தீவிரமான அரசியல் கருத்துகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கார்த்தியுடன் 'மெட்ராஸ்', ரஜினியுடன் 'கபாலி', 'காலா' என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவரானார்.

சார்பட்டா பரம்பரை செய்த சம்பவம்
காலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கியிருந்தார். நேரடியாக அமேசானில் வெளியான இந்தப் படம், தரமான சம்பவங்களை செய்தது. அதனைத் தொடர்ந்து 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். அடுத்ததாக ச்சியான் விக்ரமுடனும் மெகா கூட்டணி வைத்துள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது ரிலீஸ் அப்டேட்
காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனிடம் இருந்து பிரிந்து, ரஞ்சித் இயக்கியுள்ள முதல் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏகனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,, 'நட்சத்திரம் நகர்கிறது' வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இது ஸ்பெஷல் அப்டேட்
இந்நிலையில், 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சித்தின் படங்கள் பெரும்பாலும் அடையாள அரசியல் குறித்து பேசும் வகையில் இருக்கும். அதேநேரம், 'நட்சத்திரம் நகர்கிறது' முழுக்க முழுக்க காதல் பின்னணியில் ரொமண்டிக்காக இருக்கும் என சொல்லப்பட்டது.

தன்பால் ஈர்ப்பாளர்கள் படமா?
ஆனால், இந்தப் படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதற்கான அடையாளத்துடன் போஸ்டர்களில் தன்பால் ஈர்ப்பாளர்களின் கொடியின் வண்ணங்கள் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











