ரொமான்டிக் படம் இயக்கும் பா.ரஞ்சித்...2 ஹீரோக்கள் இவர்கள் தான்
சென்னை : அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆக்ஷன், சமூக பிரச்சனைகள் சார்ந்த படங்களை இயக்கி வந்தார்.
Recommended Video
கார்த்தியை வைத்து மெட்ராஸ், ரஜினியை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை ஆக்ஷன் படங்களை இயக்கினார். இதில் ரஜினி நடித்த கபாலி, மலேசிய தமிழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

வரவேற்பை பெற்ற சார்பட்டா பரம்பரை
கடைசியாக பா.ரஞ்சித் , ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். சமீபத்தில் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வேலை செய்த அனைவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

புதுமுகங்கள் அறிமுகம்
இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. படங்கள் இயக்குவதுடன், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பேனரில் படங்கள் தயாரித்து, புதுமுகங்கள் பலரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியும் வருகிறார் பா.ரஞ்சித்.

ரொமான்டிக் படத்தில் 2 ஹீரோக்கள்
லேட்டஸ்ட் தகவலாக, ஆக்ஷன் படங்களை தொடர்ந்து அடுத்த படத்தை ரொமான்டிக் படமாக இயக்க திட்டமிட்டுள்ளார் பா.ரஞ்சித். இந்த படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக தயாராக உள்ள இந்த படத்தில் இளம் ஹீரோக்களான காளிதாஸ் ஜெயராம் மற்றும் அசோக் செல்வன் நடிக்கிறார்கள்.

2 மொழிகளில் தயாராகிறதா
மற்ற நடிகர், நடிகைகள், ஹீரோயின்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காளிதாஸ் ஜெயராம் நடிப்பதால் இந்த படம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











