பா. ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு.. சீற்றம் கொள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. விரைவில் டீசர்!

By staff

சென்னை: பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள சீற்றம் கொள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

அட்டக்கத்தி என்ற படத்தை தனது முதல் திரைப்படமாக இயக்கினார் பா.ரஞ்சித் தனது முதல் திரைப்படத்திலே முத்திரை பதித்தார் ரஞ்சித். பின் இரண்டாவது படமாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கினார்.

Pa. Ranjith’s next production venture Setram Kol first look released!

ஒரு சுவரை வைத்து மற்றும் அதனை சுற்றி நகரும் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை படத்தில் வைத்து இருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இதற்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி மற்றும் காலா என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.இயக்க வந்து சில படங்களை இயக்கிய இவருக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பா.ரஞ்சித்.

இதற்கு பின் தான் நீலம் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளர் ஆனார் இயக்குனர் பா.ரஞ்சித். தயாரிப்பாளர் ஆக இவர் தயாரித்த இரண்டு படங்களும் ஹிட் ஆகின. பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் இவர் தயாரித்தார்.

இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனை புரிந்தது. இவர் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இதில் நடித்த அனைவருக்கும் ஒரு நல்ல அறிமுகமாக இப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது தயாரிப்பில் சீற்றம் கொள் என்ற படம் வெளிவர உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ஸ்ரீஜித், பூர்வ தாரணி, ஹனிபா போன்றவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை ராஜ வரதராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவர இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X