என்னது ஜெ. பேபியா? டைட்டிலே வில்லங்கமா இருக்கே.. இயக்குநர் பா ரஞ்சித்தின் அடுத்த சம்பவமா?

சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ' ஜெ. பேபி ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா. ரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர்.

பா ரஞ்சித் தயாரிப்பு

பா ரஞ்சித் தயாரிப்பு

வித்தியாசமான சமூக கருத்துக்கள் அடங்கிய படங்களை இயக்கி வருவது மட்டுமின்றி அதே போன்ற படங்களை தயாரித்தும் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான ரைட்டர் மற்றும் குதிரைவால் ஆகிய இரு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அட்டகத்தி தினேஷ்

மீண்டும் அட்டகத்தி தினேஷ்

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமான தினேஷ் பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், மீண்டும் பா. ரஞ்சித் தயாரிப்பில் அவர் நடிக்கும் புதிய படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஊர்வசியுடன் இணைந்து

ஊர்வசியுடன் இணைந்து

நடிகர் தினேஷ் , மாறன் , ஊர்வசி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது. விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஜெ. பேபியா

ஜெ. பேபியா

எல்லாம் சரி படத்தின் டைட்டில் ஜெ. பேபி என வைக்கப்பட்டு இருப்பது தான் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. என்ன காரணத்திற்காக இந்த டைட்டிலை வைத்துள்ளனர் என்கிற கேள்வி கிளம்பி இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குழந்தை என பலர் சொல்லிக் கொண்டு வருவதை நய்யாண்டி செய்யும் விதமாக இந்த படத்தின் கதை இருக்குமோ என யூகங்களும் கிளம்பி உள்ளன. விரைவில் அது தொடர்பான விளக்கத்தை இயக்குநர் சுரேஷ் மாரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X