பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணனின் 9 ஆண்டு கூட்டணி முறிந்தது... இது தான் காரணமா?
சென்னை : 2012 ம் ஆண்டு அட்டக்கத்தி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் டைரக்டர் பா.ரஞ்சித். அதற்கு பிறகு ரஞ்சித் இயக்கிய படங்கள் அனைத்தும் ஏதாவது சமூக பிரச்சனையை பேசுவதாக அமைந்தது.
Recommended Video
சமீபத்தில் ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. ஆர்யா, துஷரா விஜயன் லீட் ரோலில் நடித்திருந்த இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. அதிகமானவர் பார்த்த படம் என்ற சாதனையை சார்பட்டா பரம்பரை நிகழ்த்தியது.
உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களின் மனங்களை ஈர்த்த சார்பட்டா பரம்பரை 1970 களில் நடக்கும், குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சார்பட்டா பரம்பரையின் முந்தைய கதையையும் படமாக இயக்கும் ஐடியாவில் இருப்பதாக சமீபத்தில் ரஞ்சித்தே கூறி இருந்தார்.

நட்சத்திரம் நகர்கிறது
சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயனை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற ரொமான்ஸ் படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லையாம். அவருக்கு பதில் இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறாராம்.

முறிந்த 9 ஆண்டு கால கூட்டணி
அட்டக்கத்தியில் தொடங்கிய ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி சார்பட்டா பரம்பரை வரை தொடர்ந்தது. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி என அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகின. ஆனால் தற்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

இது தான் காரணமா
இதற்கு என்ன காரணம் என விசாரித்த போது கிடைத்த சில தகவல்களின் படி, தெருக்கூத்து அறிவு விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன் குரல் கொடுக்காததால் தான் ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

குரல் கொடுத்த ரஞ்சித்
Rolling Stone magazine அட்டைப்படத்தில் பாடகரும், பாடலாசிரியருமான அறிவின் ஃபோட்டோவோ, பெயரோ இடம் பெறவில்லை. அதற்கு பதில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் மற்றொரு பாடகரின் ஃபோட்டோக்கள் மட்டுமே இடம்பெற்றது. இதனை ரஞ்சித் வன்மையாக கண்டித்து, குரல் கொடுத்தார்.

அறிவுக்கு ஆதரவு
அதற்கு பிறகு அதே magazine மற்றொரு கவர் ஃபோட்டோவில் அறிவின் ஃபோட்டோ தனியாக பிரசுரிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அறிவுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன் குரல் கொடுக்காததில் ரஞ்சித்திற்கு வருத்தமாம்.

கருத்து வேறுபாடில்லை
ஆனால் வேறு தகவல்கள் கூறுகையில், ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. நட்சத்திரம் நகர்கிறது படத்தில் புதிய கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என ரஞ்சித் விரும்பினாராம். அதுமட்டுமில்லாமல் தங்கள் படத்திற்கு இசைஞானி இசையமைக்க வேண்டும் என்பது மற்ற டைரக்டர்களைப் போல் ரஞ்சித்தின் கனவாம். அதனால் தான் இந்த புதிய காம்போவாம்.

சமாதானப்படுத்திய தனுஷ்
அதே சமயம் அறிவு, தீ இடையேயான பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கப்பட்டதாம். அதைக் காட்டுவதற்காக தான் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்தநாள் பார்ட்டியின் போது தனுஷ், தீ மற்றும் அறிவுடன் ஒன்றாக இருக்கும் ஃபோட்டோ வெளியிடப்பட்டதாம்.


Click it and Unblock the Notifications











