“காலா 2.. வரும்.. ஆனா வராது”.. பொசுக்குனு இப்டி சொல்லி ரஜினி ரசிகர்களை ஏமாத்திட்டீங்களே ரஞ்சித்!
காலா போன்ற படங்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னை: காலா மாதியான படங்கள் இனி அதிகம் வரும் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கபாலி வெற்றியைத் தொடர்ந்து ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கிய படம் காலா. கடந்த ஆண்டு வெயியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொதுவாக ரஞ்சித் தனது படங்களில் தலித் அரசியலை முன்வைப்பார். அதுபோல தான் காலா படத்திலும் அவர் தலித் அரசியலை பேசியிருந்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் கஸ்பா-பி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் இரவு பாடசாலைகளை ரஞ்சித் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காலா இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பா.ரஞ்சித், காலா மாதிரியான படங்கள் இனி அதிகம் வரும் என்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது, " காலா -2 திரைப்படம் வர வாய்ப்பு இல்லை. ஆனால், காலா போன்ற திரைப்படங்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.
ஜோதிகா நடித்துள்ள ராட்சசி திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன். அந்த டிரைய்லரில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தை மையப்படுத்தி உள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. மேலும் அந்த டிரெய்லரில் பள்ளிக் கல்வி அவல நிலைகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது", என்றார்.
கபாலி, காலா போன்ற அவரது படங்களின் இரண்டாம் பாகங்களை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால், ரஞ்சித்தின் இந்தப் பதிலால் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











