GOAT படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.. பா.இரஞ்சித் ஓபன் டாக்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முதன்முறையாக இரண்டு பேரும் இணைந்து படம் செய்ததால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருந்தாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டது. இந்தச் சூழலில் அந்தப் படத்துக்கு வந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. அவர் இயக்கம் என்றாலே ஏதாவதொரு வித்தியாசம் இருக்கும்; கண்டிப்பாக ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். அதேபோல் திரைக்கதையும் படத்தில் வரும் காமெடியும் ரசிகர்களை ரசிக்க வைக்கும். அஜித்துக்கும் அவர் மங்காத்தா என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க விஜய்யுடன் அவர் இணைவதாக அறிவிப்பு வெளியானது.

pa ranjith vijay


GOAT: படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌதரி, வைபவ், பிரேம்ஜி அமரன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. முதன்முறையாக இரண்டு பேரும் இணைந்ததால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல் பல வருடங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் என்று தெரிந்ததும் இசை மீதும் பெரும் ஆவல் இருந்தது.

கலவையான விமர்சனம்: ஆனால் படத்துக்கு ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை வெங்கட் பிரபு பூர்த்தி செய்யவில்லை. அரத பழசான கதை, திரைக்கதை என எதிலும் சரியில்லை என்று ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். மேலும் இசையை பொறுத்தவரைக்கும் யுவன் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. விமர்சன ரீதியாக படம் அப்படி இப்படி அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 300 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பா.இரஞ்சித் பேட்டி: இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தனது கருத்தினை முன்வைத்திருக்கிறார். அவர் பேசுகையில், “ஒரு படத்துக்கு விமர்சனங்கள் எந்த அளவுக்கு சப்போர்ட் செய்யும் என்பது தெரியவில்லை. GOAT படத்துக்கு அவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. ஆனால் அது படத்தின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக GOAT அமைந்தது. ஆனால் ஒரு சில படங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்திருக்கிறது என்பதும் உண்மைதான்” என்றார்.

இரஞ்சித்தின் அடுத்த படங்கள்: முன்னதாக பா.இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக தங்கலான் வந்தது. அடுத்ததாக சார்பட்டா பரம்பரை 2, வேட்டுவம் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக சென்னை 600028, சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X