நட்சத்திரம் நகர்கிறது ஆடியோ வெளியீடு: ரசிகர்களுக்கு ஸ்மார்ட்டாக அழைப்பு விடுத்த பா. ரஞ்சித்

சென்னை: பா ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம், வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ஸ்மார்ட்டாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அரசியலில் பேசும் ரஞ்சித்

அரசியலில் பேசும் ரஞ்சித்

'அட்டக்கத்தி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித்தின் படங்களில் கண்டிப்பாக அரசியல் இருக்கும். அட்டக்கத்தி திரைப்படம் காதல் பின்னணியில் உருவாகி இருந்தாலும், அதிலும் அரசியலை பேசியிருப்பார் ரஞ்சித். அதேபோல், மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அவர் இயக்கிய படங்களில், அடையாள அரசியலையும் அதன் பின்னனியையும் வெளிப்படையாக காட்சிப்படுத்தியிருப்பார்.

முழுக்க முழுக்க காதல்.

முழுக்க முழுக்க காதல்.

இதுவரை அரசியல் பின்னணியில் படங்களை இயக்கிய ரஞ்சித், இந்த முறை 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் காதலை பற்றி பேசியுள்ளார். காதல் படமாக இல்லாமல், காதலைப் பற்றி பேசும் திரைப்படமாக இது இருக்கும் என, ரஞ்சித் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதேபோல், காதல் படமாக இருந்தாலும், இதிலும் அரசியல் பார்வை இருக்கும் என சொல்லப்படுகிறது.

தன்பாலின காதலர்கள்

தன்பாலின காதலர்கள்

அதேபோல், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும், திருநங்கைகள் பற்றியும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் பேசியிருப்பதை ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழில் இதுவரை இப்படியான முயற்சிகள் இல்லாத நிலையில், முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இதனை கையில் எடுத்துள்ளது, அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி காட்சிகள் உள்ளதால், இது சர்ச்சையாகும் எனவும் சொல்லபப்டுகிறது இந்தப் படத்தில், காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆடியோ வெளியீடு

ஆடியோ வெளியீடு

அட்டக்கத்தி முதல் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி வைத்திருந்த பா. ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இசையமைப்பாளர் டென்மாவுடன் பணிபுரிந்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கும், 'ரங்கராட்டினம்' என்ற படலுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், 'நட்சத்திரம் நகர்கிறது' ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நாளை (ஆக.22) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து டிவீட் செய்துள்ள ரஞ்சித், "எங்களுடன் சேர்ந்து ஆடியோ வெளியீட்டு விழாவை கொண்டாடுங்கள்" என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X