பா ரஞ்சித்தின் மனைவி சினிமாவில் என்ட்ரி…வாய்ப்பு கொடுத்த கணவருக்கு நன்றி கூறி ட்வீட் !
சென்னை : நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை நீலம் புரோடக்சன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பா ரஞ்சித்
அட்டக்கத்தி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.ரஞ்சித். முதல் படத்திலேயே எதார்த்தமான காதலை கூறி ரசிகர்கள் மனதை வெற்றார். இதையடுத்து, மெட்ராஸ், கபாலி, காலா என்ற நான்கு படங்களே இயக்கி இருந்தாலும் அவரது படங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தையும் விவாதத்திற்குரியதாகவும் மாறியுள்ளன.

சார்பட்டா பரம்பரை
இதையடுத்து, கடந்த ஆண்டு சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் அமேசான் பிரைமியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவிற்கு ஆதரவாக பல காட்சிகளை வைத்துள்ளதாக பா ரஞ்சித்தின் மீது குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தன.

நட்சத்திரம் நகர்கிறது
காதலை மையமாகக் கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்துக்கு இசையமைத்த தென்மா இப்படத்துக்கும் இசை அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்தது
இப்படத்தில், காஸ்டியூம் டிரைனராக பணியாற்றி உள்ள பா ரஞ்சித்தின் மனைவி அனிதா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த முதல் வாய்ப்புக்கு மிக்க நன்றி அன்புள்ள பா ரஞ்சித். கல்லூரிக் காலத்திற்குப் பிறகு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அனைத்து அணிகளுக்கும் எனது நன்றி என்று கூறி உள்ளார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்
நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











