Dhanush: காலில் விழுவது அடிமைத் தனம்.. தனுஷ் ரசிகர்களின் செயலால் பா. ரஞ்சித் வீடியோ வைரல்
சென்னை: நடிகர்களும் நம்மைப் போன்று மனிதர்கள் தான், அவர்களை திரையில் கதாநாயகர்களாக பார்ப்பதால் ஏற்படும் அன்பு, நடிகர்களை கதாநாயகர்கள் என்ற பிம்பத்தைக் கடந்து கடவுள் போன்ற நிலைக்கு ரசிகர்களாகவே கருதத் தொடங்கிவிடுகின்றனர். அதை பல நடிகர்களும் ஊக்குவித்து தங்களது சினிமா கெரியரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முயற்சித்தனர். அப்படியான பழைய சம்பவங்களை நடிகர் தனுஷ் அவரது ரசிகர் மன்றம் சார்பில் நடத்திய ரத்ததான முகாம் நினைவு படுத்தி உள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
அதாவது திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் தனுஷ் ரசிகர் மன்றத்தினர் சார்பாக நடத்தப்பட்ட ரத்ததான முகாம், அதில் தனுஷின் பேச்சு என எல்லாம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் உதவிகளை தனுஷ் வழங்கினார். மேடையில் தனுஷைப் பார்த்த பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி, அவர்களின் தாய்மார்கள் வரை பலரும் தனுஷின் காலில் விழுந்தனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தனுஷ்ஷை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதாவது தனுஷ் காலில் முதன் முதலில் ஒருவர் விழுந்திருப்பார், அப்போதே உடனடியாக மைக்கை வாங்கி, எனது காலில் யாரும் விழ வேண்டாம் என்று தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து தனுஷ்ஷின் நடவடிக்கையும் அவரைச் சுற்றி இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளும் தனுஷ்ஷின் காலில் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் விழுவதை ஊக்குவிப்பது போலத்தான் இருக்கிறது என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது.

இப்படி இருக்கையில், இணையவாசிகள் பலரும் தனுஷ் மற்றும் அவரது ரசிகர்களின் நடவடிக்கைக்கு இயக்குநர் பா. ரஞ்சித்தின் பழைய பேச்சு ஒன்றை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அதாவது பா. ரஞ்சித் காலில் சிலர் விழுந்தது தொடர்பாக அதைக் கண்டித்து விமர்சித்தார். அதாவது காலில் விழுவது எவ்வளவு பெரிய அடிமைத்தனம். எனது காலில் விழுகிறாயே அறிவு இல்லையா உனக்கு. பெற்ற அப்பா - அம்மாவைத் தவிர யார் காலில் விழாதே" என்று பெரும் கோபத்துடன் பேசி இருப்பார். இந்த வீடியோவைப் பகிர்ந்த இணையவாசிகள் பலரும், தனுஷ் ஏன் இப்படி நடந்து கொள்ளவில்லை என்று காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
