Don't Miss!
- Technology
இதே வேலையா போச்சு: ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய Airtel.! கடுப்பில் பயனர்கள்!
- News
கொங்கு மண்டலத்தில் இருந்து வந்த ‘பாசிட்டிவ்’ சிக்னல்.. தனியரசு ஓபிஎஸ் அணியை ஆதரிப்பது ஏன்?
- Lifestyle
இளைஞர்களுக்கு ஆணுறுப்பு பலவீனமாக இந்த 3 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்... ஜாக்கிரதையா இருங்க!
- Sports
ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
உங்க கண்ணுக்கு வால் தெரியலையா? பதற வைக்கும் குதிரைவால் ட்ரெயிலர்!
சென்னை :நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடிப்பில் உருவாகியுள்ள படம் குதிரைவால்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மார்ச் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
தனுஷின் மாறன் ரிலீஸ்...ஓடிடி.,யில் எப்போ பார்க்கலாம்...உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் கலையரசன்
நடிகர் கலையரசன் முக்கியமான பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் கார்த்தியுடன் நடித்திருந்த மெட்ராஸ் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இதையடுத்து ரஜினி, சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
கபாலி, ஜகமே தந்திரம், லாபம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்து வருகிறார். தொடர்ந்து டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

குதிரைவால் படம்
இந்நிலையில் பா ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் குதிரைவால் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை மனோஜ் மற்றும் ஷ்யாம் இயக்கியுள்ளனர். படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை ராஜேஷ் எழுதியுள்ளார்.

பா ரஞ்சித் தயாரிப்பு
இயக்குனர் பா.ரஞ்சிதின் நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். முன்னதாக படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வித்தியாசமான ட்ரெயிலர்
நாயகனுக்கு குதிரைவால் முளைப்பதாகவும், கணக்கில்தான் உலகமே சுழல்வதாகவும் இந்த ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் வித்தியாசமாக காணப்படுகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்த ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.