இந்தியன் 2வில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதிலாக அனிருத் ஏன்?.. ஷங்கர் முடிவு குறித்து பா. விஜய் பளிச்!

சென்னை: இந்தியன் 2 படத்தில் இசையமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பே அனிருத்தை இயக்குநர் ஷங்கர் புக் செய்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அப்போது அனிருத் பீக்கில் உள்ள நிலையில், அவரை இந்தியன் 2 படத்தில் இசையமைக்க வைக்கும் முடிவை ஷங்கர் எடுத்தார்.

இந்தியன் 2 படத்தின் அறிமுக பாடலான கம்பேக் இந்தியன் பாடல் வெளியான போது இந்தியன் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களுடன் கம்பேர் செய்து அனிருத்தை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

Pa Vijay reveals why Shankar chose Anirudh instead of AR Rahman for Indian 2


இந்நிலையில், சமீபத்தில் வெளியான “பாரா” பாடலில் தாது ஒட்டுமொத்த வித்தையும் இறக்கிய அனிருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், சிலர் இன்னமும் “கப்பலேறி போயாச்சு” பாடலுக்கு கால் தூசிக்கு கூட இந்த “பாரா” பாடல் வராது என்றும் கேஜிஎஃப் 2வில் இடம்பெற்ற “டூ ஃபேன்” பாடல் போல உள்ளதாகவும் ட்ரோல்களும் கிளம்பி உள்ளன.

வியூஸ் குறைவு: விஜய், அஜித் மற்றும் ரஜினிகாந்த் படங்களின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானால் 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் முதல் நாளிலேயே குவிந்து விடும். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ”பாரா” பாடலை இதுவரை 2.6 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே பார்த்து உள்ளனர். தமிழிலேயே இந்த நிலைமை என்றால் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாடல் ஒரு மில்லியனை கூட தொடவில்லை.

அனிருத் நிம்மதி: மோசமான விமர்சனங்கள் அதிகமாக குவியாமல் “பாரா” பாடலுக்கு பாராட்டுகள் கிடைத்த ஒரு நிலையில் அனிருத் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இந்தியன் 2 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை விடுத்து அனிருத் பக்கம் ஷங்கர் ஏன் வந்தார் என்கிற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்து வந்த நிலையில், அது தொடர்பான கேள்விக்கு பா. விஜய் தனது புதிய பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

ட்யூன் கேட்டே வியந்தேன்: “பாரா” பாடல் ரசிகர்களை பெரிதும் கவர காரணமே அந்த பாடலுக்கு பா. விஜய் பாட்டு எழுதியிருப்பது தான். “தாய் மண் மேல் ஆணை.. இது தமிழ் மானத்தின் சேனை” போன்ற கூஸ்பம்ப்ஸ் வரிகளை பா. விஜய் எழுதிய நிலையில், அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ஹிட்டான நிலையில், அதுதொடர்பான பேட்டியில் பேசிய பா. விஜய் நீங்க எல்லாம் பாடல் கேட்டு கூஸ்பம்ப்ஸ் ஆனீங்க.. ஆனால், நான் அந்த பாடலின் ட்யூனை முதல் முதல் கேட்கும் போதே அனி ப்ரோ அருமையாக இருக்கு நிச்சயம் சூப்பர் ஹிட் என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த ட்யூனுக்கு ஏற்ற வரிகளை தூவிய பின்னர் பாடல் இன்னமும் மெருகேறிவிட்டது என்றார்.

அனிருத் ஏன்?: இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானையே ஷங்கர் அழைத்திருக்கலாமே அவருக்கு பதிலாக அனிருத்தை அவர் ஒப்பந்தம் செய்தது ஏன்? என்கிற விமர்சனங்களுக்கு உங்களுடைய கருத்து என்ன? என்கிற கேள்விக்கு பதிலளித்த பா. விஜய், அனிருத்தின் தற்போதை உச்சம் தான் அதற்கு காரணம். ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களை தனது படங்களில் பணியாற்ற வைத்த ஷங்கர் யங் ஜெனரேஷனை கவர அனிருத்தை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் சமீபத்தில் வெளியான பல பெரிய படங்களுக்கு அனிருத்தின் இசை எந்த அளவுக்கு பக்கபலமாக இருந்தது என்பதை அனைவரும் அறிவோம். அதை தனது படத்திலும் எக்ஸ்பீரியன்ஸ் செய்து பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே ஷங்கர் அனிருத்துக்கு இந்த படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் என நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார் பா. விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X