பாடலாசிரியராக இருந்து நடிகரானவரின் புதிய படம்... டைரக்ஷனும் இவரேதான்!
சென்னை : தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் பா.விஜய். இவர் அஜீத், விஜய், ரஜினி உட்பட பலர் நடித்த 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் தமிழில் 50-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
பா.விஜய் 'ஆட்டோகிராப்' படத்துக்காக தேசிய விருது வாங்கியுள்ளார். மேலும் பல விருதுகளை வாங்கி குவித்தவர். இவர் பாடல்கள் எழுதுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் படங்களில் நடிக்க விரும்பினார். அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் 'ஞாபகங்கள்'. அதையடுத்து கலைஞரின் கதை வசனத்தில் உருவான 'இளைஞன்' படத்திலும் 'ஸ்ட்ராபரி' படத்திலும் நடித்தார்.

இந்தப் படங்கள் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக வெற்றியை தரவில்லை. ஆனாலும் தன்னுடைய ஹீரோ ஆசையை பா.விஜய் விடுவதாக இல்லை. இப்போது, பா.விஜய், எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஆருத்ரா. 'ஆருத்ரா' த்ரில்லர் படமாக உருவாகிறது.
இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனமும், வில்மேக்கர்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











