Paal Dabba Home Tour: 9 ஃபேமிலிக்கு 2 பாத்ரூம் தான்.. பால் டப்பாவின் வீடு எப்படி இருக்கு பாருங்க!

சென்னை: "காத்து மேல காத்து கீழே" என பாட்டுப் பாடி பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த பால் டப்பா என்கிற அனிஷின் ஹோம் டூர் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. புளியந்தோப்பில் பிறந்து வளர்ந்து பாடகராகவும் நடனக் கலைஞராகவும் மாறியுள்ள பால் டப்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

புளியந்தோப்பில் தாங்கள் வசித்து வந்த வீட்டை இடிக்கப் போவதாக சொன்ன நிலையில், அங்கிருந்து பெரம்பூருக்கு குடி புகுந்திருக்கிறோம் என தனது வீட்டை யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுற்றிக் காட்டியபடியே தங்கள் வாழ்க்கையின் சோகத்தையும் ஏழ்மையையும் எடுத்து காட்டியுள்ளார் பால் டப்பா.

home tour jayam ravi

கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இன்னும் வெளியே வராத துருவ நட்சத்திரம் படத்தில் "இஸ் நேம் இஸ் ஜான்" பாடலை பாடி டிரெண்டான பால் டப்பா ஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள 'மக்காமிஷி' பாடலையும் பாடியுள்ளார்.

பால் டப்பா: பால் டப்பா என்கிற பெயரில் ஆல்பம் பாடல்களை கொடுத்து ஹிட் அடித்து வரும் பாடகர் அனிஷ் சினிமாவிலும் தொடர்ந்து பல பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார். துருவ நட்சத்திரம், பிரதர் படங்களை தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் இவர் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. "காத்து மேல காத்தடிக்குது" பாடலை பாடி வேறலெவலில் ஹிட் அடித்துள்ள நிலையில், தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஹோம் டூர்: கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் பால் டப்பாவின் வீட்டுக்கே சென்று ஹோம் டூர் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். புளியந்தோப்பில் ஒரு சின்ன வீட்டில் குடும்பத்தினருடன் வளர்ந்தது குறித்தும் அந்த வீட்டில் 9 குடும்பத்துக்கும் சேர்த்து 2 பாத்ரூம்கள் தான் இருக்கும் என்றும் வீட்டை இடிக்கப் போவதாக சொன்ன நிலையில், தற்போது பெரம்பூரில் ஒரு வீட்டில் வசித்து வருவதாக கூறியுள்ளார்.

home tour jayam ravi

கலாய்த்த அம்மா: அனிஷின் டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப நல்லா இருக்கு என சிலர் சொல்லும் போது, நெஜமாவாப்பா எனக் கேட்டிருக்கிறேன் என கலாய்த்துள்ளார் அனிஷின் அம்மா. தனது மகனின் ஹேர்ஸ்டைல், டிரெஸ் செலக்‌ஷன் எல்லாம் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என்றும் ஆனால், அவன் மீதுள்ள நம்பிக்கை காரணமாக அனைத்துக்கும் சப்போர்ட் செய்து வந்திருக்கிறேன். அவன் இன்னும் நல்லா வருவான் எனக் கூறியுள்ளார் அவரது அம்மா. பால் டப்பா தொடர்ந்து சினிமாவில் வெற்றியடைந்து இதை விட பெரிய பங்களா வாங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X