பிரேமம் இயக்குனரின் "பாட்டு" படத்தில் இத்தனை பாடல்களா அம்மாடியோவ்!
சென்னை : தமிழ்,மலையாள திரையுலகில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
பட்டி தொட்டி எங்கும் தெறிக்கவிட்ட பிரேமம் படத்தை இயக்கி பல விருதுகளை வென்றவர்.
இப்பொழுது பகத் பாசில், நயன்தாரா நடிக்கும் பாட்டு என்ற படத்தை இயக்கி இசையமைத்து வரும் நிலையில் இதில் மொத்தம் எத்தனை பாடல்கள் இடம் பெறுகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இரு மொழிகளிலும்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பல குறும்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் 2013ஆம் ஆண்டு நேரம் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ப்ரேமம்
இதைத்தொடர்ந்து 2015ல் மூன்று காலகட்டங்களில் நடக்கும் காதலை மிகவும் தத்ரூபமாக ப்ரேமம் மூலம் காட்டி இருந்தார். மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. நிவின் பாலி இதில் ஹீரோவாக நடித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக அறிமுகம் செய்யப்பட்டார்.

நயன்தாரா
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்திற்கு "பாட்டு" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் பகத் பாசில் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா இதில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இசையமைப்பாளராக அறிமுகம்
இவரை நடிகர் இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்த அல்போன்ஸ் புத்திரன் "பாட்டு" படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவா வெளிவரும் படங்களில் அதிகபட்சமாக 5 அல்லது 6 பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இசையை மையப்படுத்தி உருவாகும் பாட்டு படத்தில் 11 பாடல்கள் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











