twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘பச்சை விளக்கு’ சிறந்த சமூக விழிப்புணர்வு படம்… சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த அங்கீகாரம்!

    |

    சென்னை : டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள 'பச்சை விளக்கு' திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    Recommended Video

    'V' ஒரு RARE SCRIPT | ACTOR SUDHEER BABU EXCLUSIVE | FILMIBEAT TAMIL

    பூடான் நாட்டிலுள்ள பரோ (Paro) என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் (Druk International Film Festival) சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது, 'பச்சை விளக்கு' திரைப்படம்.

    இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் (Tripvill International Film Festival) சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது. நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் (Aphrodite) திரைப்பட விழாவிலும் இறுதித் தேர்வு வரை சென்றுள்ளது.

    ப்பா... என்ன கவர்ச்சி..விஜய் பட நடிகையின் தாறுமாறு பிகினி பிக்ஸ் !ப்பா... என்ன கவர்ச்சி..விஜய் பட நடிகையின் தாறுமாறு பிகினி பிக்ஸ் !

    பெருமை

    பெருமை

    மேலும் லண்டனில் CKF சர்வதேச திரைப்பட விழா, இத்தாலியில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவான ப்ளாரன்ஸ் (FLERANCE) திரைப்பட விழா, அமெரிக்காவில் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா, சவுத் பிலிம் அண்ட் அர்ட்ஸ் அகடமி விழா மற்றும் பர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் விழாவிலும் அதிகாரப்பூர்வ தேர்வாக (Official Selection) கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளது, ‘பச்சை விளக்கு' திரைப்படம்.

    அங்கீகாரம்

    அங்கீகாரம்

    பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்து காட்டும் விழிப்புணர்வு படமாக பச்சை விளக்கு படம் உருவாகி இருந்தது. எந்தவித பிரம்மாண்ட பின்னணியும் இல்லாமல், சாதாரணமாக எடுக்கப்பட்ட ‘பச்சை விளக்கு' படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் டாக்டர் மாறன்.

    ஜெயிக்கும்

    ஜெயிக்கும்

    முதல் முயற்சிக்கு கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு இன்னும் நல்ல படங்களை தருவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சிறிய பட்ஜெட் படங்களுக்கு உலக அளவில் மரியாதை கிடைப்பது அனைத்து கலைஞர்களுக்கும் பெருமை . பட்ஜெட் என்ற ஒன்றை தவிர நல்ல கன்டென்ட் எங்கு இருந்தாலும் ஜெயிக்கும் என்பதற்கு இப்படி சில நல்ல உதாரணங்கள் இருக்க தான் செய்கிறது.

    நிதர்சனமான உண்மை

    நிதர்சனமான உண்மை

    பல புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் தமிழ் சினிமா வல்லுனர்கள் சர்வ தேச அளவில் பலவிதமான புதிய யுக்திகளை பயன்படுத்தி நிறைய சாதனைகள் படைத்து வருகின்றனர் . வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும் அங்கீகாரம் தான் அனைத்திற்கும் அடையாளமாக இருக்கிறது . இதை நன்கு புரிந்த இயக்குனர்கள் நல்ல படைப்புக்களை உலக தர பட்டியலில் பல விதமான போட்டியில் கலந்து கொண்டு தனி பெருமையை சேர்க்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

    Read more about: tamil movie
    English summary
    Pachai Vilakku film, has won the award for best social awareness film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X