Padaithalaivan Boxoffice: கேப்டனின் வாரிசு நடித்த படைதலைவன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் திரைப்படம் தியேட்டரில் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், வெங்கடேஷ், யாமினி சந்தர், அருள் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம்.

அதிரடியாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனத தந்தையைப்போலவே திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சகாப்தம் என்ற முதல் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மூன்றாவது படமாக சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. டிடைரக்டர் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் அறிமுக இயக்குநர் அன்பு இயக்கி உள்ளார்.

Padai thalaivan Shanmuga pandiyan Box Office
Photo Credit:

படத்தின் கதை: வேலு என்ற ரோலில் சண்முக பாண்டியனும், அவரின் அப்பாவாக வெள்ளைச்சாமி என்கிற வேடத்தில் கஸ்தூரி ராஜாவும் நடித்துள்ளனர். குடும்பத்தில் ஒரு நபராக மணியன் என்கிற யானையை பாசம் காட்டி வளர்ந்து வருகின்றனர். ஒட்டு மொத்த குடும்பமும் அந்த யானை மீது பாசமாக இருக்கிறது. அந்த நேரத்தில் மாமனிடம் வாங்கிய கடனுக்கான வெள்ளைச்சாமி அவமானப்பட்டு நிற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. மீதி பணத்தை பத்து நாளுக்குள் கொடுக்கவில்லை என்றால், அவ்வளவு தான் என மாமன் மிரட்ட, பணத்தை கொடுக்க என்ன செய்வது என்று யோசித்த போது, சினிமாவில் யானையை நடிக்க வைத்தால் பணம் வரும் என நினைத்து அதற்காக முயற்சி செய்கின்றனர். கடைசியில் அதுவே சிக்கலாகி, ஒரு கட்டத்தில் யானைக்கு மதம் பிடித்து கண்ணில் பட்டவர்களை எல்லாம், பந்தாடுகிறது.

அதிரடி ஆக்ஷன்: அந்த நேரத்தில் வனதுறையினர் வந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, யானையைப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைக்கின்றனர். மேலும், இதற்கு மேல் யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடியாது என்று சொல்லி யானையை முகாமில் விடுகின்றனர். ஆனால், முகாமில் இருந்த யானை காணாமல் போய்விடுகிறது. அந்த யானை எப்படி காணாமல் போனது... அந்த யானைக்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் தனது தந்தையை நினைவு படுத்தி உள்ளார். அதேபோல, இளையராஜாவின் இசையும் பின்னணியும் ரசிக்கும் படி உள்ளது.

முதல் நாள் வசூல்: நேற்று தியேட்டரில் வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாக இத்திரைப்படம் முதல் நாளில் ரூ 50 லட்சத்தை வசூலித்துள்ளதாக Sacnilk தளம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் எந்த ஒரு படமும் வெளியாகாததால், படை தலைவன் படம் கணிசமான வசூலை அள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் விஜயகாந்த் 'ஏஐ'வில் ரமணா கெட்டப்பில் வருவதால், கேப்டனை மீட்டும் ஒரு முறை தியேட்டரில் பார்க்க கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X