Padai Thalaivan Box Office: சின்ன கேப்டனுக்கு சண்டே பாக்ஸ் ஆபீஸ் எப்படி?.. படை தலைவன் 3ம் நாள் வசூல்!

சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத் தலைவன் படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. பெரிய போட்டி எதுவும் இல்லாத நிலையில், அதிகபட்சமாக 500 தியேட்டர்களில் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் அந்த படத்தை வெளியிட்டது. விஜயகாந்தின் ஏஐ மற்றும் யானையுடன் ஹீரோ, இளையராஜா இசை என ஏகப்பட்ட அம்சங்கள் படத்தில் இருப்பதால், ரசிகர்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி செல்லத் தொடங்கின.

பல மாதங்களாக ரிலீஸ் பண்ண முடியாமல் பல தடைகளை கடந்து இந்த படத்தை வெளியிட்டோம் என சண்முக பாண்டியன் பேசியிருந்தார். கடைசியாக, மாமா சுதீஷ் தான் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை வெளியிட்டார் என்றும் படத்தை வாங்க மற்றவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றனர்.

Padai Thalaivan Box Office Day 3 collection reports are here Sunday also movie maintains good
Photo Credit:

சிறு பட்ஜெட் படங்கள் பெரிதும் வெளியானாலும், முதல் நாள் வசூல் ஒரு கோடி ரூபாய் கூட வராது. ஆனால், கடந்த 3 நாட்களும் போதுமான வசூல் சண்முக பாண்டியன் படத்துக்கு கிடைத்திருப்பதாகவே சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சின்ன கேப்டன்: தமிழ் சினிமாவில் கேப்டன் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் அது விஜயகாந்த் தான் என்பது தெரிந்துவிடும். சினிமா பிரபலங்களே பலர் கேப்டன் என்று தான் விஜயகாந்தை அன்போடு கடைசி காலம் வரை அழைத்து வந்தனர். இந்நிலையில், ஆரை போலவே இருக்கிறார் என்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் விஜயகாந்தை பார்ப்பது போல இருப்பதாக கூறி வரும் ரசிகர்கள் சின்ன கேப்டன் என்றே தியேட்டர்களில் கூச்சலிட தொடங்கியுள்ளனர். விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் தனது தம்பியை சின்ன கேப்டன் என அழைத்தது தான் இதில் ஹைலைட்.

சண்டே பாக்ஸ் ஆபீஸ் எப்படி?: அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 13ம் தேதி வெளியான படை தலைவன் திரைப்படம் முதல் நாளில் 1.29 கோடி ரூபாயும், 2வது நாளில் 1.22 கோடி ரூபாயும் வசூல் செய்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் குறைந்ததா? என்றால் அதுதான் கிடையாது. தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக 1.39 கோடி ரூபாய் வரை சண்டே வசூல் சற்றே அதிகரித்து இருப்பதாக Sacknilk இணைதளம் early estimates வெளியிட்டுள்ளது.

4 கோடி ரூபாய் வசூல்: முதல் 3 நாட்களில் சின்ன கேப்டன் என ரசிகர்கள் கொண்டாடும் சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 3.9 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு நேர காட்சிகளின் வசூல் குறித்த முழு விபரம் வெளியானால், 4.5 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்கின்றனர்.

வீடியோ பாடல் ரிலீஸ்: பொள்ளாச்சியின், சேத்துமடை பகுதியின் அழகை அவ்வளவு ரம்மியமாக ட்ரோன் ஷாட் மூலம் படம் பிடித்து, யானை மீது ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு சண்முக பாண்டியன் வருவதும், அதை குளிப்பாட்டுவது, அதனுடன் உணவு உண்ணுவது, கட்டிப் பிடித்து படுத்துக் கொள்வது என யானை பாகனாகவே வாழ்ந்துள்ளார். இளையராஜா இசையில் வெளியான "உசுருக்கும் உசுருக்கும் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X