விஜய்யோட அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?.. ’படையப்பா’ பாம்பு புத்து அனுமோகன் சொல்லுறதை கேளுங்க!
சென்னை: 66 வயதாகும் நடிகர் அனுமோகன் நடிப்பிலும் அதே நேரத்தில் ஜோசியம் சொல்வதிலும் கில்லாடியாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் சொல்லியுள்ள விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடித்து விட்டு அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாற காத்திருக்கிறார்.
250 கோடி சம்பளம்: ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்துக்கு நடிகர் விஜய்க்கு அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அடுத்ததாக டிவிவி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 69 படத்துக்கு 250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளன.
படையப்பா பாம்பு புத்து: நடிகரும் இயக்குநருமான அனுமோகன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்தும் அவரது அரசியல் எதிர்காலம் குறித்தும் பேசியுள்ளார். 1987ம் ஆண்டு வெளியான 'இது ஒரு தொடர் கதை' படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அனுமோகன். நினைவுச் சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். பல படங்களை இயக்கினாலும், நடித்திருந்தாலும் அனுமோகன் என்றதுமே படையப்பா படத்தில் வரும் பாம்பு புத்துல கையை விட்டு பாம்பை எப்படி புடிச்சீங்க என ரஜினிகாந்தை பார்த்து இவர் கேட்கும் வசனம் தான் நினைவுக்கு வரும். அவரே இந்த பேட்டியில் தமிழ்நாட்டில் யார் என்னை பார்த்தாலும் நீங்கள் தானே அந்த பாம்பு புத்து என என்னையே புத்தாக மாற்றிவிட்டனர் என நகைச்சுவையாக பேசியுள்ளார்.
கேரளாவில் விஜய் பட வசனம்: ஆனால், கேரளாவில் என்னை யாராவது இப்ப பார்த்தாலும், நீங்க தான அந்த புறாவுக்கே பெல் அடிச்சவருன்னு விஜய்யை பார்த்து மின்சாரக் கண்ணா படத்தில் வசனம் பேசியது என்று தான் கேட்பார்கள். அப்போ தான் புரிந்தது. கேரளாவில் விஜய்க்கு எந்தளவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்று எனக் கூறியுள்ளார்.
எம்ஜிஆர், என்டிஆர் போல வருவாரா?: 250 கோடி சம்பளம் வாங்கும் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் அத்தனையையும் விட்டு விட்டு அரசியலில் மக்களுக்காக குதிக்கப் போகிறேன் என சொல்வதே மிகப்பெரிய விஷயம் என பலரும் பேசி வரும் நிலையில், எம்ஜிஆர், என்டிஆர் போல அரசியலில் பெரிய ஆளுமையாக விஜய் வருவாரா என்கிற கேள்விக்கு அனுமோகன் அழகாக பதில் அளித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே அடித்தளம்: எம்ஜிஆர் தனது படங்களில் வில்லன்களை கூட கொல்லமாட்டார். அடித்து திருத்துவது போன்றும் காவல் துறையில் ஒப்படைப்பது போன்றும் தான் எடுப்பார். ரசிகர்களை தாண்டி மக்கள் அவர் மீது அன்பு கொண்டிருந்தனர். என்டிஆரும் அதே போலத்தான். நடிகர் விஜய்யும் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் நாயகனாகவே மக்களுக்கு நல்லது செய்வது போன்ற படங்களில் தான் நடித்து வருகிறார். ரொம்ப மோசமாக அவர் நடித்ததில்லை. ரசிகர்களை தாண்டி மக்களுக்கும் விஜய் மீது நல்ல எண்ணம் இருக்கிறது. அதற்காக அவர் கஷ்டப்பட்டு பாடுபட்டால் நிச்சயம் அவர் நினைத்ததை முடிப்பார் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











